விண்ணியலும் வாழ்வியலும்:
KALAIKANNAN.A.K: ஐயா, கர்ப்போட்டத்தை வைத்து மழையை மட்டும் தான் கணிக்க முடியுமா இல்லை காற்று, வெயிலையும் கணிக்க முடியுமா?. அப்படி காற்றை கணிக்க முடிந்தால் ஆடிமாதம் வீசும் காற்று ஏன் ஆறு மாதம் முன்பு வீசுவதில்லை ஐயா.
ravi2251964: ஒரு கார் முன்னோக்கி செல்லும் பொழுது பின்னால் தூசி பறக்கிறது ஆனால் முன்னால் தூசி பறப்பதில்லை. முன்னாள் இருக்கும் காற்று பின்னால் இழுத்து தள்ளப்படுகிறது. பின்னால் ஒரு turbulance ஏற்படும்.
அது போல சூரியன் 216 km/s வேகத்தில் சென்று கொண்டு உள்ளது. 40,000 கி.மீ சுற்றளவு கொண்ட பூமி சூரியன் போகும் பாதையில் பின் புறத்தில் ஆடி மாதத்தில் கடக்கிறது. சூரிய பாதையின் முன் புறத்தில் மார்கழி மாதம் கடக்கிறது. எனவே இந்த பகுதியில் கர்ப்போட்டம் நடக்கிறது.
கர்ப்போட்ட காலத்தில் இரண்டு நாட்கள் தொடர்ந்து வானம் தெளிவாக இருந்தால் 20 நாட்களுக்கு வெயில் அடிக்கும் .
எனவே அந்த மாதிரி காலங்களில் அறுவடை வைத்துக் கொள்ள வேண்டும்.
ஆடி மாத கர்ப்போட்டம் எடுப்பதற்கு முக்கிய காரணம். தை மாத அறுவடைகள் எந்த தேதிகளில் ஆரம்பிப்பது என்றும்.
சித்திரையில், மழை ஆரம்பிக்குமா? வைகாசியிலும் ஆனியிலும் மழை வந்தால் சித்திரைப் பட்டம் போடலாமா? ஆனி பட்டம் போடலாமா? என முடிவு செய்வதற்காகத்தான் ஆடி கர்ப்போட்டம் பார்ப்பது.
Tags: கர்ப்போட்டகாலம்
No Comments