வடகிழக்கு தென்மேற்கு பக்கமாக வீசும் காற்று
இனி வளி மண்டலத்தில் சலனமற்று நிற்கும்
அதை தீபம் ஏற்றி காற்று எப்பொழுது திசை மாறி அடிக்கும் என்று நம் முன்னோர்கள் கவனித்து வருகின்ற வழக்கு முறை தான் தீபாவளி பண்டிகை
தீபாவளி என்பது தீபம் ஏற்றி வளி மண்டலத்தை கண்காணிப்பது என்று பொருள்
ஏன் தீபாவளி அன்று நம் தீபஒளி ஏற்றி முன்னோர்களுக்கு (பித்ரு பூஜை) படையல் போட வேண்டும் என்றால்
நம் முன்னோர்களின் இருப்பிடம் என்பது நாம்
நம் தலைமுறை அதற்கு முன்பு என்று இந்த பிரபஞ்சம் தோன்றிய அனைத்துமே
ஒளி மூலம் என்னும் ஒரு இடத்தில் சங்கமிக்கும் அல்லவா
அதாவது பித்ருலோகம் என்று சொல்லக்கூடிய இந்த பிரபஞ்சத்தை தோற்றுவித்த சிவம் என்ற மூலம்
இன்று மிகுந்த சக்தி கொண்டதாக இருக்கும்
அதாவது மற்ற ஈர்ப்பு சக்திகளில் இருந்து விலகி சிவம் என்ற மூலத்தோடு இணைந்திருக்கும்
அதனால் தான் வளிமண்டலத்தில் காற்றுகள் தற்போது சலனமற்று இருக்கும்
அமைதியாக சலனமற்று நிலைத்திருக்கும் பொழுது எப்படி மனம் பேரின்பம் பெறுமோ அதுபோல
இன்று
எண்ணெய் தேய்த்து குளித்து தீப ஒளி ஏற்றி தியானிக்கும் பொழுது அதன் சக்தி அதிக அளவில் கிடைக்கும் என்பதை நம் முன்னோர்கள் பண்டிகையாக கடத்தி வந்திருக்கிறார்கள்
மற்றபடி நரகாசுரன் அழிக்கப்பட்ட நாள் என்று புராணங்கள் கூறினாலும் கொண்டாடி மகிழுங்கள்
மகிழ்ச்சியான தருணங்கள் எப்பொழுதுமே கொண்டாடப்பட வேண்டியது ஒன்று
குருயோக மையம்
சிவனின் மைந்தன்.
Tags: திருவிழா
No Comments