வருகின்ற மார்கழி – 13 (Dec-04 2025) பௌர்ணமி அன்று காலை 9.34 – மணிக்கு கர்ப்போட்டம் ஆரம்பம் ஆகிறது. ஒவ்வொரு 18 நிமிடங்கள் நம் தலைக்கு மேலே இருக்கும் வானத்தில் இருக்கும் மேக ஓட்டங்களைப் பற்றிய குறிப்பை நோட்டுப் புத்தகத்தில் குறித்துக் கொள்ள வேண்டும். அதன் மாதிரி XL Sheet இதனுடன் இணைக்கப் பட்டுள்ளது. 6 x 18 = 108 நிமிடங்கள் 6 குறிப்புகள் எடுத்தால் அது ஒரு நாளுக்கு உண்டான மழையின் குறிப்புகள். இப்படி 11 நாட்கள் கர்ப்போட்ட குறிப்புகள் எடுத்தால் ( மார்கழி – 24 – Dec-15 மதியம் 11-42 வரை ) அது 148 நாட்களுக்கு உண்டான குறிப்புகளாகும். அதாவது அடுத்த வருசம் ஆடி – 24 ல் இருந்து ஆவணி, புரட்டாசி , ஐப்பசி, கார்த்திகை, மார்கழி 18 வரை வரப்போகும் மழைப் பொழிவுகளை பற்றிய குறிப்புகளாகும்.
போன முறை கர்ப்போட்ட குறிப்புகள் எடுத்தவர்களுக்குத் தெரியும், இப்பொழுது பொழியும், புயல் மழை குறிப்புகள் எடுத்த குறிப்புகளை விட அதிக மழை பொழிந்து கொண்டு இருப்பது.
அதற்கு காரணம் இப்பொழுது சனி கோள் வக்ரத்தில் அதாவது சனி பின்னோக்கி நகர்ந்து மீண்டும் முன்னோக்கி நகர்ந்து கொண்டு உள்ளது. அதாவாது மீனத்தில் இரண்டு திகிரி வரை முன்னோக்கி நகர்ந்த சனி மீண்டும் கும்பத்தில் 15 திகிரி வரை பின்னோக்கி நகர்ந்து மீண்டும் மீனத்தை நோக்கி முன்னோக்கி நகர்கிறது. இப்படி Reverse -ல் சனி நகரும் நிகழ்வு , பூமி சனியை கடந்து செல்லும் போது நம் கண்களுக்குத் தெரியும் காட்சிப் பிழை. இப்படி நடக்கும் பொழுது நம் பூமி சனியின் அருகே கடந்து செல்கிறது. இப்படி கடக்கும் பொழுது கர்ப்போட்ட குறிப்புகளை விட அதிக மழைப் பொழிவு உண்டாகி சேதங்கள் உண்டாகும். பூமி சனியை கடக்கும் பொழுது இது வாடிக்கை.
நாம் இந்த கர்ப்போட்ட குறிப்புகளை குறித்து வைத்துக் கொண்டால், நம் தோட்டத்தில் அடுத்த வருடம் எப்பொழுதெல்லாம், மழை பெய்யும், வெயில் அடிக்கும் என நாள் வாரியாக தெரிந்து கொண்டு பயிர் செய்வதற்கு ஏதுவாக இருக்கும்.
Google Drive XL Sheet :

Tags: கர்ப்போட்டகாலம்
No Comments