நித்தமும் நிந்தன் நினைவுடன். நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த கொடைகளை, மறந்த, மறைத்த மரபுகளை நினைவு படுத்துதல் இந்த நூல்.

நித்தமும் நிந்தன் நினைவுடன். நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த கொடைகளை, மறந்த, மறைத்த மரபுகளை நினைவு படுத்துதல் இந்த நூல்.

நித்தமும் நிந்தன் நினைவுடன்.
நம் முன்னோர்கள் நமக்கு கொடுத்த கொடைகளை, மறந்த, மறைத்த மரபுகளை நினைவு படுத்துதல் இந்த நூல்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

திருக்குறளின் முதல் குறள்.

இந்த முதல் குறளின் உண்மையான பொருள் அறிந்து கொண்டாலே நம் தமிழ் மரபின் ஆழம் புரிந்து கொள்ள முடியும். தமிழர்களின், மெய்யியல், அறிவியல் புரிதல் எவ்வளவு உயர்ந்தது என உணர்ந்து கொள்ள முடியும்.

அகர முதல எழுத்தெல்லாம் என்பதன் பொருள் என்னவென்றால். நம் தமிழ் எழுத்துக்கள் 247. “அ” வில் ஆரம்பித்து “னௌ” வரை 247 எழுத்துக்கள். அந்த 247 எழுத்துக்கள் நம்முடைய ஆதி பகவன் சிவன் உருவானதற்கு முன்பே இருக்கிறது என பொருள்பட எழுதியிருக்கிறார் திருவள்ளுவர்.
எப்படி நம் ஆதி பகவன் சிவன் உருவாவதற்கு முன் நம் 247 எழுத்துக்களும் இருக்கிறது என திருவள்ளுவர் கூறினார்?
ஆதி பகவன் சிவன் யார்?
அவர் நம்முடன் பிறந்து வாழ்ந்து, நமக்கு இந்த இயற்கையை பற்றியும், இந்த உலகம், இந்த உலகில் உயிர்கள் உண்டான விதம், உலகம் உண்டான விதம், அண்டம், பேரண்டம் என வானில் தெரியும் விண்மீன்களின் உருவாக்கம் என நமக்கு சொல்லி கொடுத்தவர். நம் அண்டத்தின் பிறப்பிடமான சிவம் எங்கே இருக்கிறது என கான்பித்ததால் அவர் சிவன் என பெயர் பெற்றார்.

நமக்கு நான்கு வேதங்களை (1. உருக்கு வேதம், 2. அதிர்வன வேதம், 3. சாம (அரசியல்) வேதம், 4. ய(தெற்கு) சூரண வேதம் ) உருவாக்கி சொல்லி கொடுத்தவர். அப்படிப்பட்ட சிவன் உருவானதற்கு முன்பே இந்த எழுத்துக்கள்

உருவாகி விட்டதா?
திருவள்ளுவர் ஏன் அப்படி சொன்னார்?

திருவள்ளுவர் காலம் எது?

2400 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் அவர் திருக்குறள் எழுதி இருக்கிறார் என்றால், நம் தமிழ் எழுத்துக்கள் அதன் வடிவங்கள் நமக்கு ஏதாவது உணர்த்துகின்றனவா?

இப்பொழுது வழக்கத்தில் இருக்கும் நம் தமிழ் எழுத்து வடிவங்கள் உருவாக்கப்பட்டு எவ்வளவு காலம் ஆகிறது. இதற்கு தரவுகள் எங்காவது கிடைக்குமா? என தமிழ் நாடு முழுவதும் தேடினாலும் கிடைக்கவில்லை. அரசியல் காரணங்களால் அது கிடைக்காது என தெரிந்து கொண்டேன். தமிழ் உருவான காலத்திலிருந்து, தற்பொழுது உள்ள எழுத்துக்கள் தான் வழக்கத்தில் உள்ளதா?

தமிழ் எழுத்துக்கள் உருவான காலம் சிவன் காலம், நம் சிவன் முதல் தமிழ்ச் சங்கத்தை உருவாக்கி கட்டமைத்தவர். அந்த காலத்தில் ஒலியாக தமிழ் சொற்கள் இருந்தன. அதை வார்த்தைகளாக்க ஒவ்வொரு சொல்லுக்கும் ஓவியங்கள் வரைந்து வாக்கியங்களாக்கினர். அதுதான் இன்றளவும் சீன மொழியியலில் உள்ளது. எகிப்தில் Pyramid -களில் உள்ள Eroclips எழுத்துக்களும் இது போன்றவையே. முதலாம் தமிழ் சங்கத்தின் காலம் சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முற்பட்டது.

சிவன் காலத்தில் நிலவின் ஓட்டத்தை நன்கு கவனித்து, அமாவாசை முடிந்து மூன்றாம் பிறையை மாதத்தின் முதல் நாளாக்கி மாதங்களை உருவாக்கினார். ஒரு மாதத்திற்கு 29.5 நாட்கள் என்றும், அதனால் முதல் மாதத்திற்கு 30 நாட்கள் என்றும் இரண்டாம் மாதத்திற்கு 29 நாட்கள் என்றும் வகுத்தார். அவர் காலத்திலேயே 7 கோள்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றின் பெயர்களைக் கொண்டு வாரத்துக்கு பெயரிட்டு மக்களின் அன்றாட புழக்கத்திற்கு கொண்டு வந்தார். அவர் காலத்தில் உருவாக்கப்பட்ட வாரம் இன்றுவரை மாறாமல் உலகில் உள்ள அனைத்து காலண்டர்களிலும் உள்ளது. அவர் குறிஞ்சித் தினையில் குமரிக்கண்டத்தில் இருந்து நம்மை ஆண்டவர். சேயோன் என்றால் அன்மை , சேய்மை கட்டுகளில் சேய்மை என்பது காலத்தால் நம்மை விட மூத்தவர் எனும் பொருளில் அழைக்கப்படுபவர்.

20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சிவன் காலத்தில் முதலாம் தமிழ் சங்கத்தால் உருவாக்கப்பட்ட சித்திர எழுத்துக்கள்.
காலத்தை உருவாக்கியவன் சிவன். அதனால் அவன் பெயர் காலன். இரண்டாம் தமிழ் சங்க காலத்தில் அந்த சித்திர எழுத்திற்குப் பதிலாக ஒலி வடிவங்களுக்கு உயிர் எழுத்துக்கள் 12 ஆகவும், மெய் எழுத்துக்கள் 18 ஆகவும், உயிர் மெய் எழுத்துக்கள் 216 ஆகவும், ஆயத எழுத்து – 1 எனவும் உருவாக்கினார்கள். இரண்டாம் தமிழ்ச் சங்கத்தின் காலம் சுமார் 12600ஆண்டுகளுக்கு முற்பட்ட காலம். முருகன் காலத்தில் உருவாக்கப்பட்ட எழுத்துக்களின் பெயர் தமிழி.
இந்த எழுத்துக்களைக் கொண்டு சொற்களும், வாக்கியங்களும் எளிதாக உருவாக்கப்பட்டு இலக்கணமும். வகுக்கப்பட்டது. இந்த தமிழி எழுத்துக்களுக்குத்தான் தொல்காப்பியத்தில் மீண்டும் இலக்கணம் எழுதி பாதுகாத்து வந்தனர்.

12,800 ஆண்டுகளுக்கு முன்னர் இரண்டாம் தமிழ்ச் சங்கத்தில் முருகனால் உருவாக்கப்பட்ட தமிழி எழுத்துக்களின் வடிவங்கள்
முருகன் காலத்தில் சொற்களை 12 உயிர் ஒலிகள் 18 மெய் ஒலி களைக் கொண்டு எழுத்துக்கள் உருவாக்கப்பட்டது.

தொல்காப்பிய காலம் சுமார் 6000 ஆண்டுகளுக்கு முற்பட்டது. அதனால் பின்னர் உருவாக்கப்பட்ட இப்பொழுது வழக்கத்தில் உள்ள தமிழ் எழுத்துக்கள் அப்பொழுது இல்லை. எனவே வரி வடிவங்களின் பொருள் பற்றி தொல்காப்பியத்தில் இல்லை.

தற்பொழுது வழக்கத்தில் உள்ள தமிழ் எழுத்துக்கள் மூன்றாம் தமிழ்ச் சங்கத்தால் திருமால் (பெரும் ஆள்) அவர்களால் உருவாக்கப்பட்டது. மூன்றாம் தமிழ்ச்சங்கம் தழைத்தது 3600 ஆண்டுகளுக்கு முன்பு. இந்த கணக்குகள் எல்லாம் எப்படி எடுக்க முடிகிறது என்றால். வானில் விண்மீன்களின் , ராசி வடிவமைப்புகளிலும், நல்சித்திரங்களின் அணி வகுப்பிலும் , அதில் நகரும் நம் கோள்களின் இயக்கத்தையும் கணக்கீடு செய்து திருமாலால் கொடுக்கப்பட்ட பஞ்சாங்கத்தினைப் புரிந்து கொண்டும், திருக்குறளின் எண்களிலும், நம் தமிழ் எழுத்துக்களின் அறிவியல் உண்மைகளையும் , உள்வாங்கினால் முடியும்.

3600 ஆண்டுகளுக்கு முன்னாள் திருமாலால் மூன்றாம் தமிழ்ச்சங்கத்தில் உருவான தமிழ் எழுத்துக்கள்.

முதலில் உயிர் எழுத்துக்கள் 12 என ஏன் முடிவெடுத்தார்கள். உயிர் எழுத்துக்கள் 12 எனவும், மெய் எழுத்துக்கள் 18 எனவும் ஆய்த எழுத்து 1 உயிர் மெய் எழுத்து 216 எனவும் எப்படி , எதன் அடிப்படையில் உருவாக்கினார்கள். நிலா ஒரு நொடியில் 1 கி.மீ. வேகத்திலும், பூமி ஒரு நொடியில், 30 கி.மீ. வேகத்திலும், சூரியன் ஒரு நொடியில் 216 கி.மீ வேகத்திலும் இந்த அண்டத்தில் அண்டத்தின் மையமான சிவத்தை நோக்கி வீடு பேறு அடைய சென்று கொண்டு இருக்கிறது என முருகன் காலத்திலேயே அறிந்து புரிந்து அதை நம் தமிழ் எழுத்துக்களில் . எண்களாக வைத்து நமக்கு கொடுத்துள்ளார்கள். இந்த கணக்கீடுகளால் தான் 12,600 வருடங்களுக்கு முன்பு நடந்த குமரிக்கண்ட நீரூழியை முன்னரே கனித்து பெரும்பாலான தமிழர்களை வான்பகை வென்று இலங்கை வரை காவடியுடன் வந்து இரண்டாம் தமிழ் சங்கத்தை கபாடபுரத்தில் கட்டமைத்தார் முருகன்.

ஒரு வருடத்திற்கு 12 மாதங்கள் என சிவன் காலத்தில் உருவான காலண்டரிலேயே நம் முன்னோர்கள் அறிந்து வைத்து இருந்தனர். குமரிக்கண்ட நீரூழியில் மீண்டு வந்த மக்களின் உடனடி தேவைக்கான உணவுக்காக முருகன் மருத நிலங்களை உருவாக்கி வேளாண்மையை உருவாக்கினார்.. அது வரை உலகில் வேளாண்மை இல்லை. பூமியின் வட கோளத்தில் இந்த நீர் தெற்கில் வடிந்து குமரிக்கண்டத்தை மூழ்கடிக்கப் போகிறது என முன்பே ஊகித்து கணக்கீடுகள் மூலம் அறிந்த முருகன் , வடக்கில் நிலம் மேலே வருகிறது. நாம் வாழ்ந்த இடங்கள் மூழ்கப் போகிறது என உணர்ந்த முருகன் வடக்கில் நிலங்கள் வாழத் தகுந்தவைகளாக மாறும் வரை இலங்கையில் தண்டு ஊன்றி ஒரு 60 ஆண்டுகளாவது இருந்தால் தான் , வாழத் தகுந்த நிலங்களுக்கு நகர முடியும், என முடிவு செய்து அதுவரை இலங்கையில் மருத நிலங்களை உருவாக்கி , உணவுத் தேவையை பூர்த்தி செய்து புதிய நிலங்களுக்கு, உணவுகளுடன், குடும்பங்களுடன், கடல்களின் (நெய்தல்) வழியாக புலம் பெயர்ந்தனர்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *