விண்ணியலும் வாழ்வியலும்:
ஏப்ரல் 30 வைகாசி பௌர்ணமிக்குப் பிறகு வடகிழக்கிலிருந்து தென்மேற்காக, அதாவது கிழக்கிழிலிருந்து மேற்காக சென்று கொண்டு இருந்த மேகங்கள் மேற்கிலிருந்து கிழக்காக நகரத் தொடங்கி விட்டது. மழைப் பொழிவு ஆரம்பித்து விட்டால் தமிழகம் குளிர்ந்து விட்டது. இப்பொழுது கத்திரி வெயில் காலம் இல்லை அது ஏப்ரல் 30-ல் முடிந்து விட்டது.
அதே போல் சித்திரை மாதத்தில் தான் பௌர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் வரும் வைகாசியில் பௌர்ணமி சித்திரை நட்சத்திரத்தில் வராது என்று தவறாக நினைத்துக் கொண்டு உள்ளார்கள். எப்பொழுதுமே சித்திரை மாதத்தில் தான் சித்திரை நட்சத்தில் பௌர்ணமி வரும் மற்றும் மேசராசியில் ஏப்ரல்-14 அன்று தான் சூரியன் உள் நுழையும் எனும் தவறான கருத்தை உண்மை என்று நினைத்துக் கொண்டு உள்ளார்கள். சித்திரை நட்சத்திரத்திற்கு நம் தமிழகத்தில் 2000 வருசங்களுக்கு முன்பு வரை அறுவை அதாவது கன்னி அறுவடை செய்த கதிர் வைத்தது போல்தான் அறுவை என பார்த்தனர். அதே நட்சத்திரத்தில் தான் எப்பொழுதும் பௌர்ணமி வரும் என்றால் அந்தந்த நட்சத்திரத்திற்கும் ராசிகளுக்கும் அந்தந்த மாதப் பெயர் வைத்து இருப்பார்கள். அப்படி இல்லாமல் நட்சத்திரங்களுக்கும் ராசிகளுக்கும் வேறு பெயர்கள் வைக்கப்பட்டு இருக்கிறது, ஏன் என்றால் சூரிய நகர்வினால் ராசிகளில் சூரியன் நகரும் போது ஒவ்வொரு 2000 வருசங்களுக்கு ஒரு முறை மாதங்களில் பௌர்ணமி கள் மாறும் அதை எளிதாக வானில் பட்டம் மாறுவதை, காற்று திசைதிரும்புவதை வைத்து அறிந்து கொள்ளலாம், 2000 வருடங்கள் வரை அந்த சித்ரா பௌர்ணமி அந்த அறுவை (சித்திரை) நட்சத்திரத்தில் சித்திரை மாதத்தில் தான் வரும், எனவே அதை சித்திரை நட்சத்திரமாக்கினார்கள் இருண்ட காலமான களப்பிரர்கள் காலமான , காஞ்சிபுரத்தைக் கைப்பற்றிய காலமான கி.பி 80 களில் தான் அந்த அறுவை நட்சத்திரத்தை சித்திரை நட்சத்திரமாக்கி னார்கள். ஒவ்வொரு 60 சுழல் ஆண்டுகளுக்கு ஒருமுறை நம் சித்திரை -1 சமநாளிலிருந்து ஒரு நாள் அதிகமாகும். உதாரணத்திற்கு march-21 லிருந்து 60 வருசங்கள் கழித்து சித்திரை – 1 march_22 ஆகும். இப்படி ஒவ்வொரு 60 சுழல் ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒரு நாள் அதிகமாவது ஏப்ரல்-14 வரை நம் தமிழர் கையில் கோயில்கள் இருந்த வரை கருவறையிலிருந்து கொடி மரத்தின் வழியாக ராசிகளைப் பார்த்து மாற்றிக் கொண்டு வந்தார்கள். இந்த வளமை கோயில் களில் நடப்பதை அவர்கள் உணர்வதற்கு 1500 வருசங்கள் ஆகி விட்டது. இதை மாற்ற எண்ணி நம் கோயில்களை விசய நகர சிற்றரசின் துனையோடு ஆரியர்கள் கையில் கொடுத்து விட்டனர். உள்ளே வந்தவர்களுக்கு கோயில் எதற்கு கொடிமரம் எதற்கு என்றெல்லாம் தெரியாததால் அவர்கள் பூசை செய்வதையும் , பூக்களைக் கொண்டு நன்கு அலங்காரம் செய்வது தான் கோயிலின் முக்கிய வேலை என நினைத்து அதை செய்கின்றனர். ஆனால் கோயில்களில் தான் அந்தந்த ஊருக்குண்டான காலண்டர் மற்றும் பஞ்சாங்கம் தயாரிக்கும் இடம் என்பதை அறியாமல் பூசை செய்வதை வழக்கமாக்கினர். சூரிய நகர்வால் சமநாளிலிருந்து ஒவ்வொரு 60 சூழல் ஆண்டுக்கு ஒரு முறை தேதி நகர்ந்து 32 அறுபது சுழல் ஆண்டுகள் கடந்தால் சூரியன் இரண்டு நட்சத்திரங்கள் கடந்து இருக்கும், ஆனால் பூமியிலிருந்து பார்க்கும் போது 30 திகிரி நகர்ந்தது போல் கண்ணுக்கு ராசிகளில் தெரியும். அந்த 32 அறுபது சுழல் ஆண்டுகளாக அந்த சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் உழன்று கொண்டு இருக்கும். எப்பொழுது சூரியன் மீனராசியை கடந்து விட்டதோ ? அதிலிருந்து சித்திரை மாதத்தில் உத்ரத்தில் தான் பௌர்ணமி வரும். எனவே தான் நம் தமிழ் முன்னோர்கள் சூரியன் ராசிகளில் நகர்வதை அவதானித்து , சூரியன் ஒரு பாதம் நகர எடுக்கும் 247 ஆண்டுகளை தமிழின் 247 எழுத்துக்களாக வடித்து உள்ளார்கள். நமக்கு விண்ணியலே தெரியாது என கூறும் ஒரு காலம் வரும் ! என முன்பே அறிந்து தான் 247 எழுத்துக்களாகவும், 1330 குறள்களாகவும் சூரிய சக்திமைய ஓட்டங்களை நமக்கு விட்டுச் சென்று இருக்கிறார்கள் . ஒவ்வொரு சூரிய பெயர்ச்சியின் போதும் உலகில் பெரும் மாற்றம் நிகழம் . அது இயல்பு. கொரோனாவிற்கு முன் இருந்த உலகம் வேறு. கொரோனாவிற்குப் பின் உள்ள உலகம் வேறு.
இதற்கு முன் ரிசபத்திலிருந்து மேசத்திற்கு மாறிய பொழுது களப்பிரர் காலமாக இருண்ட காலமாக தமிழ்நாடே அல்லோலகல்லோலப்பட்டது .
அதற்கு முன் மிதுனத்தில் இருந்து ரிசபத்திற்கு மாறிய பொழுது 3- ஆம் தமிழ்ச் சங்கம் திருமாலால் உயிர்த்தெழந்து அவரால் பஞ்சாங்கம் படைத்து, கல்லனை கட்டி தமிழ்நாட்டை சோறுடைத்து ஆக்கினார். அதற்கு முன்னால் கடகத்தில் இருந்து மிதுனத்துக்கு மாறிய பொழுது மகாபாரதப் பெரும் போர் திருநெல் வேலியில் ஆதிச்சநல்லூரில் நடந்தது. அதற்கு முன்பு இரண்டாம் ஊழியில் பூம்புகார் 6666 ஆண்டுகளுக்கு முன்பாக மூழ்கியது.
அதற்கு முன்பு 2000 ஆண்டுகளுக்கு முன்பு இராமயணப் போர், அதற்கும் முன்பு குபேர கால ஆட்சி முறை அதற்கும் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் முருகன் காலத்தில் குமரிக்கண்ட பேரழிவு.
இப்படி சூரியனுடைய ஒவ்வொரு ராசி பெயர்ச்சியிலும் பௌர்ணமிகளும் அதே நட்சத்திரத்தில் வரும் ஆனால் மாதங்கள் மாறும் . இதை ஒரு குச்சி நட்டு சூரியன் நிலநடுக்கோட்டில் வரும் போது நிழல் குறித்து அதை கருவரையாக்கி அதிலிருந்து கொடிமர குச்சி வழியாக வான பார்த்தால் தெளிவாக புரியும் . நேரில் இங்கு வந்தாலும் அதைப்பற்றிய புரிதல் கிடைப்தற்கு விளக்கங்கள் கொடுக்க முடியும். அயனாம்சம், சாயனம் நிராயனம் என குழம்பாமல் அதைப் பற்றிய முழுப்புரிதல்களும் குச்சி
நட்டு அதன் வழியாக வான்பாத்து தெரிந்து தெளிந்து கொள்ளலாம்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments