வரும் வெள்ளிக் கிழமை 9/10/2026 இரவு தீபாவளி.
சனிக்கிழமை 10/10/2026 காலை தலைக்கு எண்ணெய் வைத்து குளித்து புத்தாடை அணிந்து தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
வரும் பௌர்ணமி வரை காற்று நின்று வளி மண்டலமாக அசையாமல் திசை மாற ஆரம்பிக்கும்.
இந்த ஐப்பசி அமாவாசையில் தான் நம் பூமி, சூரியன், நிலா, சக்தி மையம் நான்கும் நேர் கோட்டில் இருக்கும்.
எனவே சக்தியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தான் மழை பொழிவு அந்த அமாவாசையில் இருக்கும்.
வரும் அடுத்த பௌர்ணமி கார்த்திகை தீபம்.
அன்று வரை தென் மேற்குப் பருவக் காற்று திசை மாற்றி வடகிழக்காக மாறும் .
திசை மாறுவதை அனைவரும் தெரிந்து புரிந்து கொள்ள வீட்டின் வெளியே கார்த்திகைப் பௌர்ணமியில் விளக்குகள் வைத்து தினமும் கவனிப்பார்கள்.
இரண்டு மூன்று நாட்களில் மாறும் அதுவரை வைத்து முடித்துக் கொள்வார்கள்.
அதை பட்டம் விட்டு conform செய்து கொள்வார்கள்.
இது தான் பட்டம் பார்ப்பது.
இந்த பட்டத்தில் விளையும் பயிர்கள் அந்த பட்டத்தில் விளையாது .
எனவே தென்மேற்கு பருவக்காற்று , வடகிழக்கு பருவக்காற்று என இரண்டு பட்டங்கள் தமிழ் உலகுக்கு.
எனவே இந்த தீபாவளி கார்த்திகை தீபம் உண்மைகளை உணர்ந்து வழிபாடு செய்ய கற்றுக் கொண்டு நம் குழந்தைகளுக்கும் இந்த நிகழ்வுகளைக் கடத்த வேண்டும்.
Tags: திருவிழா
No Comments