Tag: சிவவாக்கியம்

சிவவாக்கியம் பாடல் 312 – ஐம்புலனை வென்றவர்க்கிங்கு

312. ஐம்புலனை வென்றவர்க்கிங்கு அன்னதானம் ஈவதாய் , தன் புலன்கள் ஆகி நின்ற நாதருக்கு அது ஏறுமோ? ஐம்புலனை வென்றிடாத அவத்தமே உழன்றிடும், வம்பருக்கும் ஈவதும் , கொடுப்பதும் அவத்தமே! ஐம்புலன்களையும் என்றால் தொட்டுணர்தல், சுவைத்து உணர்தல், முகர்ந்து உணர்தல், பார்த்து உணர்தல், கேட்டு உணர்தல் என்பவை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 311 – ஓம் நமோ!

311. ஓம் நமோ! என்றுளே பாவை என்று அறிந்த பின், ஆண் உடல் ! கருத்துளே பாவை என்று அறிந்த பின், நானும் நீயும் உண்டடா! நலம் குலம் அது உண்டடா! ஊணும் , ஊணும் ஒன்றுமே உணர்ந்திடா உனக்குளே! ஓம் நமோ! ஓம் என்பது முருகன் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 310 – விழித்த கண் துதிக்கவும்

310. விழித்த கண் துதிக்கவும், விந்து நாத ஓசையும், மேருவும் கடந்த அண்ட கோளமும் கடந்து போய், எழுத்தெலாம் அழிந்து விட்ட இந்திரஞால வெளியிலே, யானும் நீயுமே கலந்த தென்னதன்மை ஈசனே! விழித்த கண் துதிக்கவும் என்றால் நம் கண்களுக்குத் தெரியும் அத்துனை பொருட்களைக் கொண்டு தான் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 309 – இருத்தி வைத்த

309. இருத்தி வைத்த சற்குருவை சீர் பெற வணங்கிலீர். உரு கொடுக்கும் பித்தரே ! கொண்டு நீந்த வல்லீரோ! உருக்கொடுக்கும் பித்தரும்! உருக்குள் வந்த சீடனும், பருத்தி பட்ட பாடுதான் பண்ணிரண்டும் பட்டதே!. பண்ணிரண்டும் பட்டதே! என்பது 12 ராசிகளைத்தான் கூறுகிறார். இருத்தி வைத்த சற்குரு என்றால் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 308 – உதித்த மந்திரத்தினும்

308. உதித்த மந்திரத்தினும், ஒடுங்கும் அக்கரத்தினும், மதித்த மண்டலத்தினும், மறைந்து நின்ற சோதி நீ ! மதித்த மண்டலத்துளே மரித்து நீ இருந்த பின்! சிரித்த மண்டலத்துலே சிறந்ததே சிவாயமே! உதித்த மந்திரத்தினும், பெருவெடிப்பு எனும், அண்ட மலர்வு உதித்ததுதான். Sound Silent மாதிரி பிரமாண்டமாய் இருந்த {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 307 – ஒடுக்குகின்ற சோதியும்

307. ஒடுக்குகின்ற சோதியும் முந்திநின்ற ஒருவனும், நடுத்தலத்தில் ஒருவனும் நடந்து காலில் ஏறியே, விடுத்து நின்ற இருவரோடு மெய்யினோடு பொய்யுமாய், அடுத்து நின்ற அறுமீனோ , அனாதிநின்ற ஆதியே!. ஒடுக்குகின்ற சோதியும், முந்தி நின்ற ஒருவனும் என்றால் சோதியாகிய சுடர் அனைத்தையும், சுட்டுப் பொசுக்கி ஒடுக்கி விடும் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 306 – மண்ணுலோரும், விண்ணுலோரும்

306. மண்ணுலோரும், விண்ணுலோரும், வந்தவாரு எங்கனில்? கண்ணினோடு சோதி போல் கலந்த நாத விந்துவும், அண்ணலோடு சக்தியும், அஞ்சு பஞ்ச பூதமும், பண்ணினோடு கொடுத்து அழிப்பாரோடு ஏழும் இன்றுமே!. மண்ணில் , இந்த உலகில் வாழும் மனிதர்களும், மீண்டும் பிறப்பெடுக்கக் காத்திருப்போரும், பிறவா வரம் பெற்று விண்ணோடு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 305 – பொங்கியே தரித்த

305. பொங்கியே தரித்த அவ் அச்சு புண்டரீக வெளியிலே, தங்கியே தரித்தபோது தாது மாது உலையதாம். அங்கியுட் சரித்தபோது வடிவுகள் ஒளியுமாய்க் கொம்புமேல் வடிவு கொண்டு குருவிருந்த கோலமே!. புண்டரீகம் என்றால் தாமரை. கருப்பை இருக்கும் , கருமுட்டை இருக்கும் வெளியை , தாமரை மொட்டுப் போன்ற {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 304 – ஓதுவார்கள் ஓதுகின்ற

304. ஓதுவார்கள் ஓதுகின்ற ஓர் எழுத்தும் ஒன்றதே, வேதமென்ற தேகமாய் விளம்புகின்றது அன்று இது. நாதம் ஒன்று நான்முகன் மாலும் நானும் ஒன்றதே. ஏதுமன்றி நின்றது ஒன்றை யான், உணர்ந்த நேர்மையே !. தமிழ் மறை ஓதுவார்கள், இறைவனைப் பற்றி தமிழில் பாடி ஓதும் போது ஓர் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 303 – உறங்கிலென் விழிக்கிலென்

303. உறங்கிலென் விழிக்கிலென் உணர்வு சென்று ஒடுங்கிலென் . சிறந்த ஐம் புலன்களும், திசைத் திசைகள் ஒன்றிலென், புறம்பும் உள்ளும் எங்கணும், பொருந்திருந்த தேகமாய் , நிறைந்திருந்த ஞானிகாள் , நினைப்பதேது மில்லையே. இறைவனை அடைய, அல்லது முக்தி அடைய, உறங்கிலென், விழித்திலென், உணர்வு சென்று ஒடுங்கிலென் {…}

Read More