Tag: சிவவாக்கியம்

சிவவாக்கியம் பாடல் 259 – ஆறும் ஆறும்

259. ஆறும் ஆறும் ஆறுமாய், ஓர் ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய், ஏறு சீர், இரண்டு மூன்றும், ஏழும் ஆறும் எட்டுமாய் . வேறு வேறு ஞானமாகி, மெய்யினோடு பெய்யுமாய். ஊறும் ஓசையாய் அமர்ந்த மாய மாய மாயனே! ஆறும் ஆறும் ஆறுமாய் 666 – என்பது முருகனை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 258 – ஐந்தும் ஐந்தும்

258. ஐந்தும், ஐந்தும், ஐந்துமாய் , அல்லவற்றுள் ஆயுமாய், ஐந்து , மூன்றும், ஒன்றுமாகி நின்ற ஆதி தேவரே. ஐந்தும் ஐந்தும் ஐந்துமாய் அமைந்து அனைத்து நின்ற நீ, ஐந்தும் ஐந்தும் மாயன் உண்மை யாவர் காண வல்லரே! வாயு, தேயு, பாயு, ஆயு- இவையெல்லாம் என்ன..? {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 257 – மூன்று முப்பத்தாறினோடு

257. மூன்று முப்பத்தாறினோடு, மூன்று மூன்று மாயமாய், மூன்று முக்தி ஆகி மூன்று , மூன்று மூன்று மூன்று மாய், தோன்று சோதி மூன்ற தாய், துலக்கமில் விளக்கதாய், என்றன் நாவினுள் புகுந்த தென்கோல நம் ஈசனே. மூன்று முப்பத்தாறினோடு என்றால் 3 x 36 = {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 256 – ஏக முக்கி

256. ஏக முக்கி, மூன்று முக்தி, நாலு முக்கி, நன்மை சேர். போகமுற்றி புன்னியத்தில் முக்கியன்றி முக்கியாய். நாகமுற்ற சயனமாய் நலம் கடல் கடந்த தீ, ஆக முக்தி ஆகி நின்ற தென் கொலாதி தேவனே. முக்தி அடைய வேண்டும் எனில் மும்மலங்களான ஆணவம், கன்மம், மாயை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 255 – மட்டுலாவு தந்துளாய்

255. மட்டுலாவு தந்துளாய் அலங்கலாய் புணர்கழல், விட்டு வீழில் தாக போக விண்ணில் மண்ணில் வெளியினும். எட்டினோடு இரண்டினும், இதத்தினால் மணம் தனை, கட்டி வீடிலாது வைத்த காதல் இன்பம் ஆகுமே! தந்துகி விசை என்றால் புவி ஈர்ப்பு விசைக்கு எதிராக செயல்படும் விசை , எட்டு {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 254 – அடக்கினும் அடக்

254. அடக்கினும் அடக் கொனாத அம்பலத்தின் ஊடு போய். அடக்கினும் அடக் கொனாத அன்பிருக்கும் என்னுளே! இடக்கினும், இருக்கினும் கிலேசம் வந்து இருக்கிடும். நடக்கினும் இடைவிடாத நாத சங்கு ஒலிக்குமே!…. அடக்க நினைத்தாலும் அடக்க முடியாத ஊற்றாக வரும் எண்ணங்களின் மூலம் தான் சிற்றம்பலம். அந்த அம்பலத்தின் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 253 – விண்ணி நின்று

253. விண்ணி நின்று மின் எழுந்து, மின் ஒடுங்குமாறு போல், என்னுள் நின்று என்னும் ஈசன் என் அகத்துள் இருக்கையால். கண்ணில் நின்று கண்ணில் தோன்றும் , கண் அறிவிலாமையால், என்னுள் நின்ற என்னையும் , யான் அறிந்ததில்லையே! மின்னல் விண்ணிலேயே எழுந்து விண்ணிலேயே ஒடுங்குகிறது. வரும் {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 285 – உள்ளினும் புறம்பினும்

உள்ளினும், புறம்பினும் , உலகமெங்கனும், பறந்து !எள்ளில் எண்ணெய் , போல நின்று, இயங்குகின்ற எம்பிரான்.மெல்ல வந்து என்னுள் புகுந்து, மெய்த்தவம் புரிந்த பின்,வள்ளல் என்ன வள்ளலுக்கு வண்ணம் என்ன வண்ணமே ! எம்பிரான் என்பது , பிராண வாயு தான்.அந்த காற்று என் உள்ளினும், என்னிலிருந்து {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 284 – வாக்கினால் மனத்தினால்

284. வாக்கினால் மனத்தினால், மதித்த காரணத்தினால், நோக்கொனாத நோக்கை உண்ணி, நோக்கை யாவர் நோக்குவார், நோக்கொணாத நோக்கு வந்து , நோக்க நோக்க நோக்கிடில், நோக்கொணாத நோக்கு வந்து, நோக்கை என் கண் நோக்குமே!. நோக்கொனாத நோக்கை உன்னி என்றால் , உன்னிப்பாக நோக்க முடியாத நோக்கை {…}

Read More

சிவவாக்கியம் பாடல் 252 – என் அகத்துள்

252. என் அகத்துள் என்னை நான் எங்கும் நாடி ஓடினேன். என் அகத்துள் என்னை நான் அறிந்திலாத தன்மையால் என் அகத்துள் என்னை நான் அறிந்துமே தெரிந்த பின், என் அகத்துள் என்னை அன்றி யாதும் ஒன்றும் இல்லையே! என் உடலில் உயிர் எங்கு உள்ளது, அந்த {…}

Read More