319. ஆ கி கூ வென்றே உரைத்த அட்சரத்தின் ஆனந்தம்,
யோகி , யோகி என்பர் கோடி , உற்றறிந்து கண்டிடார் !
ஊகமாய் மனக் குரங்கு பொங்குமங்குமிங்குமாய்,
ஏகம் ஏகமாகவே இருப்பர் கோடி கோடியே !
அ – அண்ட வெடிப்பு. அதாவதது சத்தமும், ஒளியும் பிரிவதால் ஏற்படும் வெப்பம். ஒளி கண்களுக்குத் தெரிவது, சத்தம் கண்களுக்குத் தெரியாது, அது சக்தி. காதுகளில் உணர முடியும். ஒளி – சிவம்
சத்தம் – சக்தி.
சிவமும் சக்தியும் ஒடுங்கும், மீண்டும் மலரும். ஒளி, ஒலியால் ஏற்படும் வெப்பம் . வெப்பத்தால் ஏற்படும் பொருட்கள்தான் இந்த கண்ணுக்குத் தெரியும் அண்டம். காற்று, நீர், நிலம்.
ஊ என்பது உயிர் உண்டான தருணமான உ என்பது நகராத உயிர்கள் உற்பத்தி ஆகி தரையிலிருந்து விடுபட்டு ஊர்வனவாக மாறிய தருணம் .
ஆ – அண்டத்தில் சூரியன் தனியாக உருவான தருணம். க் + இ = கி வெளியில் மூன்று சூரியன்கள் ஒன்றுக் கொண்று துனையாக குடும்பமாகிய தருணம்.
க் + ஊ = கூ தரையில் விடுபட்டு வெளியில் ஊர்ந்த உயிர்கள் உண்டான தருணம்.
ஆனந்தத்தில் ஆ, ஊ என எழும் சத்தம். ஆண் பெண் இணைதலில் உள்ள ஆ, ஊ எனும் ஆனந்தம். இதை உற்றறிந்து உணராமல் மேலோட்டமாக , புரிதலில்லாமல் , உயிர் உற்பத்தி ஆக , ஏற்படும் ஆனந்தத்தை பேரானந்தம் என என்பவர்களை யோகிகள் என்று கோடி பேர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர்.
ஊகமாக இது என்ன அது என்ன இங்கும், அங்கும் எங்குமாய் மனம் அலைபாய்ந்து கொண்டு ஏராளமான (கோடி, கோடியே ) பேர் ஏகமாய் இருப்பர் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments