கதிர் திருப்பம் என்றால் என்ன?

கதிர் திருப்பம் என்றால் என்ன?

கோடைகாலக் கதிர்திருப்பம் | மிதுன (கடக) சங்கராந்தி | Summer Solstice

இன்று (ஜுன் 21) 2025 ஆண்டிற்கான கோடைகாலக் கதிர்திருப்பம் (Summer Solstice)

கதிர் திருப்பம் என்றால் என்ன?

பூமி சிறிது சாய்ந்தவாறாகச் சூரியனைச் சுற்றுவதால் பூமியிலிருந்து பார்க்கும்போது சூரியன் தினமும் சரியாக கிழக்கில் உதிக்காமல் ஆறு மாதங்கள் வடக்கு நோக்கி நகர்ந்தவாறும், ஆறு மாதங்கள் தெற்கு நோக்கி நகர்ந்தவாறும் உதிப்பதைக் காணலாம். வடக்கு நோக்கி நகர்ந்த சூரியன் தனது பயணத்தை தெற்கு நோக்கி மாற்றும் நாளே கோடைகாலக் கதிர் திரும்பும் நாளாகும். உத்தராயணம் முடிந்து தட்சிணாயணம் ஆரம்பிக்கும் நாள். அன்று இரவு பொழுது குறைவாகவும், பகல் பொழுது அதிகமாகவும் இருக்கும்.
மேலும் சூரியனின் கதிர்கள் புமியின் மீது மிகுந்த சாய்வுடன் விழுகின்றன. சூரியன் திசை திரும்பும் முன் தனது நகர்தலை நிறுத்துவதுபோல உள்ளதால் இலத்தீனில் இந்நாளை Solstice (Sol – சூரியன், stice – நிற்றல்) என குறிக்கின்றனர்.

கதிர் திரும்பும் நாட்கள் மிதுன, தனுசு (கடக, மகர) உடுக்கணங்களின் பெயர்களால் குறிக்கப்படுவதேன்?

கதிர் திரும்பும் நாட்களில் சூரியனின் பாதை வானில் மிதுனம் (கடகம் -Cancer), தனுசு (மகரம்-Capricorn) வழியே அமையும். இதனால் அவ்வுடுகணங்களில் பெயரால் இந்நாட்கள் அழைக்கப்படுகின்றன.
குருசாமி R

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *