ஆடி மாத காற்று சுழன்று சுழன்று அடிக்க ஆரம்பித்து விட்டது. மழையுடன் கூடிய காற்று சுழன்று அடிக்கிறது. இன்று ஆடி 3 June – 23 திங்கள் கிழமை.
நாளை காலை 6 மணியிலிருந்து கர்ப்போட்ட காலம். ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் முதலில் வரும் அமாவாசையிலோ அல்லது பௌர்ணமியிலோ கர்ப்போட்டம் ஆரம்பிக்கும். இன்று எங்கள் பகுதியில் பெய்யும் மழை போன 2024 ஆடி – 17 ல் எடுத்த கர்ப்போட்ட தரவின் அடிப்படையில் பெய்கிறது. இதுவரை எப்பொழுதும்
ஆடி – 4 -ல் கர்ப்போட்டம் ஆரம்பிக்கும் என கணக்கிட்டு ஒரு நாளைக்கு 13.33 நாட்கள் வீதம் ஆடி – 18 வரை எடுத்தோம். அது சிறு கணக்கு மாறுபாடு ஏற்படுகிறது என போன முறை ஆடி – 1 – லிருந்தே ஆடி – 30 வரை கர்போட்ட தரவை எடுத்து எதில் பெய்யும் மழைகள் பொருந்துகிறது என பார்த்த பொழுது ஆடி முதலில் வந்த பௌர்ணமியில் கர்ப்போட்டம் ஆரம்பித்து இருக்கிறது. நாம் 4 ம் தேதியிலிருந்து கணக்குகள் எடுத்ததால் மழையின் காலம் மாறுபாடு ஏற்படுவது தெரிந்து இந்த முறை முதலில் வந்த அமாவசையில் ஆரம்பிக்கிறோம். ஆனால் அது ஆடி – 4 -ல் அமாவாசை வருவது சரியாக பொருந்துகிறது. எனவே செவ்வாய் கிழமை காலை – 6 மணியிலிருந்து கர்ப்போட்ட தரவுகள் எடுப்போம். அடுத்த வருசம் தை முதல் ஆனி கடைசி வரை பெய்யும் மழையின் காலத்தையும், அளவுகளையும் அறிந்து கொள்வோம்.
திருத்தப்படாத காலண்டரில் கர்ப்போட்ட காலம் இரண்டு நட்சத்திரங்கள் பின் நோக்கி நகர்ந்து விட்டதை அறியாமல் இருக்கிறது. சூரியன் நட்சத்திரங்களில் பின் நோக்கி நகர்வதால் இந்த மாற்றம் ஏற்படுகிறது. எனவே சரியான கர்ப்போட்ட காலம் இதுதான். நாளை செவ்வாய்கிழமை காலை கர்ப்போட்டம் ஆரம்பித்து 18 நாட்கள் தொடர்ந்து எடுப்போம். அடுத்த வருச மழையை கணிப்போம்.
இந்த கர்ப்போட்ட காலம் ஒரு நாளைக்கு எடுக்கும் தரவுகள் 10 நாட்களுக்குப் பொருந்தும். ஒவ்வொரு 144 நிமிடங்கள் ஒரு நாள். 1440 நிமிடங்கள் ஒரு நாளைக்கு . | 44 X 10 = 1440 நிமிடங்கள்.
18 நாட்களுக்கு தரவுகள் எடுத்தால் 18 x 10 = 180 நாட்கள். அடுத்த வருசம் தை முதல் ஆனி வரை 180 நாட்கள் பெய்யும் மழையை குறிப்பெடுப்போம்.
Tags: கர்ப்போட்டகாலம்
No Comments