ஜெர்மனியில் கடந்த 10 நாட்களாக நண்பரின் மகனுடைய காரில் 3000 கி.மீ பயணம் செய்துள்ளோம். ஜெர்மனியின் சாலைகளில் கார் வழுக்கிக் கொண்டு 30, 50, 60, 70, 80, 100, 120 , 200 KM வேகத்தில் 10 மீட்டர் இடைவெளி விட்டு செல்லும் அழகிய காட்சி நன்றாகத் தான் இருக்கிறது. ஜெர்மனி அரசு இந்திய அரசு வழங்கிய Driving license – ஐ நம்பி Left hand drive to wright hand drive எப்படி அனுமதித்தார்களோ தெரியவில்லை, நாங்களே காரை எடுத்து 3000 கி.மீ சுவிட்சர்லாந்து வரை மலைகளிலும், Autoban NH-லும் வளைய வந்தோம். புழுதியே இல்லாமல் தெருக்கலும், வீடுகளும், கார்களும் நன்றாகத் தான் இருக்கிறது. ஆனால் ….. 100 ரூ கொடுத்து urine போவதற்கு WC – ஐ தேடி அலையும் போது நம் ஊர் சொர்க்கமாக தெரிகிறது. ஒரு இத்துப் போன காப்பிக்கு 600 ரூ கொடுக்க வேண்டி இருக்கிறது. 10 மணிக்குத்தான் இருட்டுகிறது. வானம் பார்க்க வெளியே வந்தால் bad behavior என Lodge உரிமையாளர்களால் பார்க்கப் படுகிறது. ஒரு பய உணர்வினுடே இரண்டு முறை ஜெர்மனி போலீசை எதிர்கொண்டோம். மிகவும் மரியாதையாக கேள்விகள் கேட்டு Passport வாங்கி Checking செய்து அனுப்பி வைத்தார்கள். நடந்து செல்பவர்களுக்கும், சைக்கிளில் செல்பவர்களுக்கும் கார்களும், dram – களும் நிறுத்து வழிவிட்டு செல்லும் காட்சியே அழகு. அனைவரும் Traffic rules – ஐ மதிக்கிறார்கள். அதே போல் வேளாண்மை 100 ஏக்கர் 200 ஏக்கர் ஒரே மாதிரி மானாவாரி பயிர்கள் தான் பயிரிடப்படுகிறது. சுழற்சி முறையில், கோதுமை, மசால், சூரியகாந்தி, பயிர் வகைகள் என பயிரிடுகிறார்கள். கிராமங்கள் ஓட்டு வீடுகளாக அழகாக இருக்கிறது. அனைவரும் அவரவர் வீடுகளை கட்டுவதிலிருந்து, பெயிண்டிங், தச்சு வேலை, Electrical என அவர்களே செய்து கொள்கிறார்கள். நாளை மறுநாள் எகிப்து பிரமிடுகளை பார்க்க செல்லவிருக்கிறோம்.
Tags: வரலாறு
No Comments