24 நாட்கள் ஜெர்மன், Swiss , எகிப்து சுற்றுப் பயணம் இனிதே நிறைவுற்றது.
July-2-ம் தேதி Ticket Booking செய்து 3-ம் தேதி புறப்பட்டு 4-ம் தேதி frankfurt Airport – ல் Praven, Sarath, Ratendran – uncle பார்த்ததும் ஜெர்மனியின் சில்லென்ற காற்றில் Auto born -ல் write hand driving – ல் 150 – km வேகத்தில் பறந்து , Stute guard Lanton perton என வாயில் நுழையாத ஊர்களைக் கடந்து Preven, நந்தினி வீட்டை அடைந்து ஆசுவாசப் படுத்தி , சுத்தமான ஊர்களின் அழகை ரசித்து , ஜெர்மனி கிராமங்களில் வாழ்வியலை , அவரவர் வீடுகளில் உள்ள அத்துனை வேலைகளையும், அவரவர்களே லாவகத்துடன் கையால்வதைப் பார்த்து வியந்தோம். அடுத்த இரண்டு நாட்கள், உப்பிண்டி பெருகு, கொள்ளு ரசம் என நம்ப ஊரிலிருந்து ஜெர்மனி சென்ற தடமே இல்லாமல், வரப்போகும் நாட்களில் , நாக்கு என ஒன்று இருப்பதை , மறக்கப் போகிறோம் என்று தெரியாமல் Swiss புறப்பட்டு, Rain நதியின் படுகையில் பழைய கோட்டைகளையும், நீர்வீழ்ச்சியையும் பார்த்து , Swiss பனிமலையை அடைந்து மூன்று நாட்கள் இருந்தோம். ஆனால் அங்கு பனி யெல்லாம் இல்லை. சிலு சிலு வென்று குளிரை அனுபவித்து, மகிழ்ந்தோம். நம் இமய மலையில் Lay, Ladak பைக்கிலேயே பயணித்து பனிமலைகளை கடந்த அனுபவத்தை விட எனக்கு அது வியப்பளிக்கவில்லை. rain நதி ஐரோப்பா முழுவதும் கடந்து செல்கிறது. நீர்வீழ்ச்சியும் படு வேகமாக , பக்கத்தில் பார்க்க வடிவமைத்தது நன்றாக இருக்கிறது. மீண்டும் praven வீட்டிற்கு வந்து நாக்கை தாமரை Anty – யின் ரசத்தால் சரி செய்து கொண்டு, ஹிரன்யாவுடன் விளையாண்டு, அவர்களின் கிராமத்தை நடந்தே , எதிரே வருவோரிடம், ஹலோ சொல்லிக் கொண்டே கடந்து , கடைகளில் ஜெர்மனியில் பேச முயற்சி செய்து, குப்பைகளை , தொட்டிகளைத் தேடி மறக்காமல் போட்டு, ஒரு வித தவிப்புடன் , சாலைகளில் 3000 KM காரை ஓட்டி எந்த வித சேதாரமும் இன்றி கொண்டு சேர்த்த நண்பர் செந்தில் , கை நடுங்க காரை praven – இடம் ஒப்படைத்த போது, சாதனை செய்தது போல் இருந்தது. 10 நாட்கள் கடந்து எகிப்தை நோக்கி முனிக் நகரில் Airport -ல் விமானத்தில் ஏறி Hur guda எகிப்திய நகரில் இறங்கி Arrival Visa வாங்க ஒரு மணி நேரம் அசிங்க பட்டோம். Thumara nam kia hai என கேட்டு திருதிருவென்று விழித்துக் கொண்டு அவரையே பார்த்துக் கொண்டிருந்த நன்பர் ராஜேந்திரனை, இந்தி தெரியாமல் Indian என்று எழுதி இருக்கிறீர்கள் எப்படி நம்புவது என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு கடைசியில் visa-வை வாங்கி இமிக்ரேசன் pass செய்வதற்குள் வேர்த்து வியர்த்து, ஒருவரை ஒருவர் பார்த்து பரிதாபப்பட்டுக் கொண்டோம். ஒரு வழியாக கெய்ரோ வந்து Lady egypt – கைகளில் அடைக்கலம் புகுந்து Hotel – ஐ அடைந்தோம்.
தொடரும்.
Tags: எகிப்து
No Comments