July – 14 எகிப்து தலைநகரம் கெய்ரோ வை அடைந்து Lady eyypt travellers காரில் Hotel – ஐ அடைந்து அன்று ஆசுவாசப் படுத்திக் கொண்டோம். அன்று மாலை 7 மணிக்கு அந்த hotel -ன் 17 மாடியில் உள்ள சாப்பிடும் அறையின் கண்ணாடி வழியாக Pramid இருப்பதை பார்த்து அது 25 Km தூரத்தில் இருப்பதை அங்கு இருந்த ஊழியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, அதை ஆர்வமாக பார்த்தவாரே சாப்பிட்டு முடித்து, pramid-ன் நினைவுகளுடன், அதன் கணக்குகளின் அசைவுகளுடன் தூக்கம் இருந்தும் இல்லாமலும், காலை 7 மணிக்கு காரில் ஏறி Giza நகருக்கு பயணித்து , Pramid – ஐ நெருங்க நெருங்க அதன் அழகை ரசித்துக் கொண்டே, கூட வந்த பெண் Guide – Duwa – வின் Pramid பற்றிய விளக்கங்களுடன் , Pramid-ன் Gate -No-1 ஐ அடைந்து Ticket வாங்கி அந்த Lounge -ல் pramid பற்றிய விளக்கங்களை ஒரு மணி நேரம் விளக்கி கூறிய Guide – பஸ்ஸில் எங்களை ஏறச் சொல்லி முதலில் Sphinx பார்த்து விட்டு Kufu pramid – ஐ பார்த்து விடுவோம் என கூறினார். Pramid பார்ப்பதற்கு ஆளுக்கு ஒரு 1300 ரூ Ticket. உள்ளே 10 km பரப்பளவில் உள்ள Pramid – களை பார்ப்பதற்கு Ac பங்கள் 20 ஓடிக் கொண்டே இருக்கிறது. அதில் ஏறி நாம் எங்கு இறங்க வேண்டுமோ அங்கு இறங்கி பார்த்து மீண்டும் எங்கு செல்ல வேண்டுமோ உள்ளேயே எத்தனை முறை வேண்டுமானாலும் பஸ்ஸில் ஏறி இறங்கிக் கொள்ளலாம். நாங்கள் பஸ்ஸில் ஏறி கடைசியாக Gate – 2 அருகில் இருக்கும் Sphinx – ஐ பார்ப்பதற்கு இறங்கி அது தாழ்வாக குழிக்குள் 72 மீட்டர் அகலத்திலும் 20 மீ உயரமாகவும் அழகான அந்த Sphinx -ன் அருகில் Photo- எடுத்துக் கொண்டே , அந்த Sphinx – தான் நம் Galaxy -ன் Centre (சிவம்) என்பதை 72, 20 வீடு எனும் எண்களை அந்த உருவத்தில் வடித்திருப்பதை பார்த்து அது காளையாகத்தான் இருந்து இருக்கும். அதை சிங்கமாக சொல்கிறார்கள் என்பதை அந்த Sphinx – ஐ பற்றி அந்த Guide இடம் வாணியலுக்கும் இதற்கும் உள்ள தொடர்பை பற்றி கேட்டால், அவருக்கு அதைப் பற்றி ஒன்றும் தெரியாது என கூறிவிட்டார். Sphinx – உள்ளே சென்று பார்ப்பதற்கு அனுமதி இல்லை என்று கூறி விட்டார்கள். இந்த Sphinx இருக்கும் இடத்திற்கும் kufu Pramid உள்ள இடத்திற்கும் கீழே சுரங்க அறை இருப்பதாகவும், அதில் ஏதோ வேலை நடப்பதாகவும், உள்ளே செல்ல அனுமதி இல்லை என்றார்கள். Sphinx -க்கும் kufu pramid -க்கும் இடையே மூன்று சிறிய pramid கள் Sphinx தலையின் மட்டமும், kufu Pramid அடியின் மட்டமும் சரியாக இருக்கிறது. அது சுண்ணாம்பு பாறைகளால் ஆன மலைகளை குடைந்து தான் இந்த pramid – களையும் , Sphinx ஐ யும், ஏராளமான குகை வீடுகளையும் அமைத்து இருக்கிறார்கள். அங்கு மலைகளில் இருந்த சுண்ணாம்பு பாறைகளை எடுத்து அடுக்கி, மலையை மேலிருந்து சீராக்கி, கீழே வரை மலையை அப்புறப் படுத்தி, மிச்சமான கற்களைக் கொண்டு அந்த சிறிய மூன்று pramid – களை கட்டி இருக்கிறார்கள்.
நான் அங்கு செல்லும் வரை நடுவில் இருக்கும் Khafere – Pramid – ல் தான் Kings-Chamber-ம், Queen Chamber -ம் இருக்கும் என நினைத்து இருந்தேன். அங்கு சென்றால் முதலில் இருக்கும் kufu Pramid – தான் முதலில் கட்டப்பட்டது. எனவும், அதில் தான் King – Chamber -ம் , Queen Chamber -ம் இருப்பதை பார்த்து Google தரவுகளில் முரணாக இருப்பதை உணர்ந்தேன்.
அந்த Sphinx -க்கு அருகில் இருக்கும் முதல் Kufu – Chamber -க்கு பஸ்ஸில் ஏறி அதை அடைவதற்குள் மணி – 11 – ஆகி விட்டது. கடும் வெயில் . அந்த மாதிரி வெயிலை நான் அதுவரை அனுபவித்ததில்லை. கண்கள் பூக்க kufu pramid – ஐ ஒரு முறை நடக்க முடியாமல் ஒரு சுற்று சுற்றி வந்தோம். ஒரு சுற்று வர 1 km ஆகிறது. அந்த kufu – Pramid உள்ளே சென்று பார்க்க 2500 ரூ ticket வாங்க வேண்டும். பகல் 12 மணிக்கு மேல் நடக்க முடியாமல் , அடுத்த முறை kufu-வின் உள்ளே சென்று பார்த்துக் கொள்ளலாம், என முடிவு செய்து , பஸ் ஏறி பசியில் உள்ளே இருக்கும் , காபி Shop – க்கு சென்று எதாவது சாப்பிடலாம் என பார்த்தால், ஒருவருக்கு ஒரு டீ, பன், கேக் சாப்பிட்டதற்கு ரூ 2500 பில் ஆகிவிட்டது. நொந்து கொண்டே மூன்று pramid – களையும் பஸ்ஸில் பயணித்துக் கொண்டே , இவ்வளவு பிரமாண்டத்தை 5000 வருடங்களுக்கு முன்னாள் எதற்கு, எப்படி நம் மக்கள் படைத்தார்கள் என வியந்து கொண்டே வெளியே வந்து Grand Egypt musicium வந்தடைந்தோம்.
தொடரும்.
Tags: எகிப்து
No Comments