இன்று
oct – 4 – 2025
ஐப்பசி – 12 – 5126 போன மார்கழியில் எடுத்த கர்ப்போட்ட தரவுகளின் அடிப்படையில் இது வரை எங்கள் பகுதியில் மழைப்பொழிவு சரியாக அமைந்து இருக்கிறது. இனிவரும் 35 நாட்களுக்கு மழை இல்லை. சரியாக வருகிறதா? என பார்த்துக் கொண்டு இருக்கிறேன். எங்கள் வீட்டில் இரண்டு வாகை மரமும் ஒரு வேப்ப மரம், ஒரு ஏழிலைப் பாலை, ஒரு குமிழ் இருக்கிறது. இரண்டு நாட்கள் முன்பு வரை கூடை கூடையாக இலைகள் உதிர்ந்த வண்ணம் இருந்தது. இந்த இரண்டு நாட்களாக காற்று இல்லாமல் ஒரிரு இலைகள் தான் உதிர்ந்து கூட்டுவதற்கு இலகுவாக இருக்கிறது.
நாளை மறுநாள் ஐப்பசி பௌர்ணமி . இதிலிருந்து தென்மேற்கு பருவக்காற்று மெல்ல நின்று வரும் அமாவாசை Oct-20
தீபா வளியில் இருந்து அறவே காற்று நின்று, மேகங்கள் நகராமல் ஆங்காங்கே நின்று Oct-20 தீபாவளிக்கு அடுத்த பௌர்ணமிக்கு அடுத்த இரண்டு மூன்று நாட்களில் காற்று திரும்பி வடகிழக்கு பருவக்காற்றாக மாறும். காற்று திரும்பும் வரை கார்த்திகை தீபத்தை வீட்டின் வெளியே வைத்து தீபம் நின்று எரிகிறதா? என அனைவரும் அவரவர் வீடுகளில் ஏற்றி சோதிக்கும் நிகழ்வுதான் கார்த்திகை தீபம். கார்த்திகையில் காற்று திரும்பி வடகிழக்கு பருவமழையை வரவேற்கும் விதமாக கார்த்திகை தீபம் தமிழர்களால் கொண்டாட படுகிறது. அடுத்த பெளர்ணமியில் காற்று திரும்பி அதற்கு அடுத்த பெளர்ணமியில் தீபம் வீட்டு வாசலில் வைக்க முடியாத அளவுக்கு காற்று வீசும். எனவே வரும் தீபாவளி Oct-20 – லிருந்து வானம் வளி மண்டலமாக காற்று இல்லாமல் அமைதியாக இருப்பதையும், அதற்கு அடுத்த பௌர்ணமியில் காற்று, திரும்புவதையும் அவரவர் இல்லங்களில் தீபம் வைத்து சோதிக்கலாம்.
Tags: கர்ப்போட்டகாலம்
No Comments