சிவவாக்கியம் பாடல் 320 – கோடி கோடி

சிவவாக்கியம் பாடல் 320 – கோடி கோடி

320. கோடி கோடி கோடி கோடி குவலயத்தோர், ஆதியை!
நாடி நாடி நாடி நாடி நாள் அகன்று வீணதாய் !
தேடி தேடி தேடி தேடி தேகமும் கசங்கியே!
கூடி கூடி கூடி கூடி நிற்பர் கோடி கோடியே!

ஆதி, அநாதி இதை புரிந்து கொள்ளத் தான் (குவலயத்தோர் ) கோள வடிவிளான இந்த பேரண்டத்தில் வாழும் மனிதர்கள் அலையாய் அலைகிறார்கள்.
இந்த மனம், கருத்து, எண்ணம், Information, Soft Ware இவையெல்லாம் அநாதி என்றால் , இந்த கண்ணுக்குத் தெரியும் அனைத்துப் பொருட்களும் (சிவம்) Hardware ஆதியாக இருக்குமோ? என நாடி நாடி இந்த நாட்கள் கடந்து ஒரு முடிவுக்கு வர முடியாமல் வாழ்வை வீணடித்து, மீண்டும் தேடி தேடி அவர்களுடைய உடல் கசங்கி, வீழ்ந்து , கூடி கூடி நின்று அதை விவாதித்து நிற்பர் கோடி கோடியே! என்கிறார் சிவவாக்கியர். ஆதி என்றால் அழிவு உண்டு. அநாதி ( இறைவன்) என்றும் அழிவில்லாதது.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *