321. கருத்திலான் வெளுத்திலான், பரணிருந்த காரணம்!
இருத்திலான், ஒழித்திலான், ஒன்றும், இரண்டும் ஆகிலான்!
ஒருத்திலான், மறித்திலான், ஒழிந்திடான், அழிந்திடான்,
கருத்தில் கீ யும், கூ வும் உற்றோர், கண்டறிந்த ஆதியே!.
இறைவன் கருத்து இல்லாதவன், கருப்பாகவும், வெளுப்பாகவும் இல்லாமல் உயரத்தில் இருந்த காரணம் என்ன? இருக்கிறானா? ஒழித்து வைத்து இருக்கிறானா?, ஒன்றி இருந்தவன், இரண்டாக பிரிந்தானா? இருக்கிறான் என்றால் எளிதில் புரியுமா? மறித்து விடுவானா? அழிந்துவிடாதவனா? ஒழிந்து இருக்கிறானா? எளிதில் அவனை அறிந்து விட முடியுமா? இப்படி என்னற்ற கேள்விகளை அடுக்கிக் கொண்டே போகிறார்.நம் தமிழின் 247 எழுத்துக்களில் உயிர் எழுத்து 12-ம் Periodic table. அண்ட வெடிப்பில் ஆரம்பித்து மனித உற்பத்தி ஆன தருணம் வரை விளக்குவது. மெய் எழுத்துக்கள், நம் மனித உடலில் 6 ராச உறுப்புகளையும், 6 துணை உறுப்புகளையும், 6 சுரப்பிகளையும் விளக்குவது. உயிர் மெய் எழுத்து 216-ம் 96 தத்துவங்கையும், 120 தனிமங்களையும் உள்ளடக்கியது. இதில் க் + ஈ = கீ – ல்
க் என்பது வெளியை குறித்து கல்லீரலை உணர்த்துவது , ஈ என்பது ஈர்த்தல் எனும் காந்தத் தன்மை அண்டத் தில் உள்ள நான்கு கரத்தில் ஒரு கரத்தில் நம் சூரியனும், பூமியும், நிலவும் பெற்ற தருணத்தை உணர்த்தும் எழுத்து கீ என்பது .
ஊ என்பது உயிர் உற்பத்தி ஆகி ஊர்வன வாகிய தருணம். க் + ஊ = கூ .
(ஆ உ ம் = ஓம்) இப்படி தமிழ் எழுத்துக்களில் ஒளிந்து இருக்கும் அறிவியல் உண்மைகளில்
கருத்துக்களை உற்றறிந்தோர்க்கு ஆதியை கண்டு கொள்ள முடியும் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments