322. வாதி வாதி வாதி வாதி வண்டலை அறிந்திடான் !
ஊதி ஊதி ஊதி ஊதி ஒளி மழங்கி உளறுவான்.
வீதி வீதி வீதி வீதி விடையறுப் பொருக்குவோர்,
சாதி சாதி சாதி சாதி சாகரத்தைக் கண்டிடார்.
வாதிடுவோர் எப்பொழுதும் மேலோட்டமாக இருப்பதைத் தான் வாதிடுவார்கள் . அடி வண்டல் பயன்பாடு அதிகம். அது வாதிடுவோர்களுக்கு புரியாமல் அந்த வண்டலை அறியமாட்டார்கள். ஊதி ஊதி என்றால் சாதாரண மூச்சு தான் அவரவர் யோகம் என அறியாமல் வாசி , மூச்சு பயிற்சி என அரை குறையாக புரிந்து கொண்டு ஊதி ஊதி வெப்பம் வெறியேறி தேகம் ஒளி மழுங்கி உளற ஆரம்பித்து விடுவார்கள் என்கிறார். வீதி வீதியாக சென்று விடைகளை பொருக்கு பவர்கள், சாகரம் எனும் கடலின் தன்மைகளை அறியாமல், சாதிப்பதிலேயே நேரத்தை செலவிட்டு அதன் பிறழ் லயத்தில் மூழ்கி கடலின் உண்மை மாற்றத்தை கண்டிட மாட்டார்கள் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments