323. ஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை ஆண்மை கூறும் அசடரே!.
தாண்மையான வாதி ரூபம் கால கால காலமும்,
வாண்மையாகி மௌனமான பாசம் ஆகி நின்றிடும்,
நாண்மையான நரலை வாயில் நங்கும் இங்கும் அங்குமே!
ஒரு நன்மை தரும் செயலை அதனை செய்யும் பொழுது ஆண்மையுடன் சொல்லாமல் செய்து விட்டு அதன் நன்மைகளை மற்றவர் பயனடைவதை பார்ப்பது தான் தாண்மை. ஒரு கலையில் கவனம் செலுத்தி அதில் பூரணத்துவம் அடைவது வாண்மை. ஆண்மை என்பது ஒரு செயலை செய்ய துணிந்து அதைப் பின் வாங்காமல் செய்து முடிப்பது. நாண்மை என்றால் நாணுவது நாணாமை என்பது நாணம் இல்லாமல் இருப்பது. நங்கு பார்ப்பது என்பது திருப்தி இல்லாமல் பரபரப்புடன் அலைவது.
இறைவனை ஆண்மையானவன் , அவன் செய்ய நினைத்த செயலை முடிக்கும் ஆண்மை பெற்றவன் என்று கூறும் அசடர்களே ஆண்மையை வெளிக்காட்டாமல் இறைவன் தாண்மையாக இந்த உலகை படைத்து உயிர்களை படைத்த அந்த வாதியின் ரூபம் கால கால காலமாய் வாண்மையாகி ( பசு பதி பாசம் ) பாசம் எனும் கயிற்றில் பசுவை கட்டி பதியிடம் விடாமல் மறைத்தல் எனும் பணியில் வாண்மையாக நின்றிடுவார் என்கிறார். நரல் என்றால் சத்தம் . ம் எனும் சத்தம் நம் உடலாகவும், அதே சத்தம் இந்த பேரண்டம் முழுதும் பரவி இருக்கிறதை இங்கும் அங்கும் என்கிறார். சத்தம் தான் ஆகாயம், காற்று, வெப்பம், நீர் நிலமாக நம் உடலாக கட்டமைக்கப் பட்டுள்ளது.
Tags: சிவவாக்கியம்
No Comments