324. விங்கு வென்ற அட்சரத்தின் வேட்டுவாகி கூ வுடன்.
சுங்கமாக சோமனோடு சோமன் மாறி நின்றிடும்,
அங்க மாமுனைச் சுழியில் ஆகும் ஏக வாகையாய்,
கங்குலற்று தியானமற்று காணுவாய் சுடரொளி!
விங்கு என்ற அட்சரம் என்றால் விந்துவை குறிக்கிறார். கூ என்றால் கூமுட்டை கூமுட்டை என்பது விந்துவுடன் சேராத முட்டை கலைந்து கழிவாகி விடும் உயிர் பெறாது. அந்த கூமுட்டையுடன் விந்து வெடித்து (வேட்டுவாகி) சேரும் பொழுது ,
சோமனோடு என்றால் சந்திர நாடி என்றால் குளிர்ச்சி பெண் என்று பொருள் . சுங்கம் என்றால் ஏற்றுமதிக்கு கொடுக்கும் வரி அது போல விந்துவை ஏற்றி அதற்கு வரியாக , பெண்ணோடு பெண்ணுக்குள் விந்து நின்றிடும். அந்த அங்கம் உருவாகும் மாமுனை சுழியான முட்டையில் விந்து வெற்றிவாகை சூடி ஏகமாய் உடலாக ஒளியாக மாறுவதை, கங்கு என்றால் வெப்பம் நிறைந்த தகதகக்கும் கங்கு இல்லாமல், தியானம் இல்லாமல் இன்பமாக ஒரு சுடர் உயிராக ஒளியாக உடலாக படைப்பதை பார்ப்பாய் (காணுவாய்) என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments