இன்று nov -22 – 2025 சனிக்கிழமை மார்கழி – 1.
இன்று தமிழ் மரபில் உருவான சித்தரியல் நாட்காட்டிப்படி மார்கழி – 1.
நம் தமிழ் நாட்காட்டி 60 சுழல் ஆண்டுக்கு ஒருமுறை ஒரு தேதி வட செலவு சமநாளில் இருந்து ஒரு நாள் அதிகமாகும். அதாவது இப்பொழுது சமநாள் march – 21 -ல் வருகிறது. அடுத்த 60 ஆண்டுகள் கழித்து சித்திரை – 1 சமநாளில் இருந்து ஒரு நாள் தள்ளி march – 22 ஆக மாற்ற வேண்டும். இது எதற்கு என்றால் சூரிய நகர்வை நாம் அறிந்து புரிந்து கொள்வதற்காக. மீண்டும் 60 ஆண்டுகள் கழித்து சமநாளில் இருந்து இரண்டு நாட்கள் தள்ளி சித்திரை -1 march – 23 -ல் தொடங்க வேண்டும். சூரியன் இரண்டு திகிரி நகர்ந்து விட்டது என புரிந்து கொள்வதற்காக. மீண்டும் 60 ஆண்டுகள் கழித்து சமநாளில் இருந்து மூன்று நாட்கள் தள்ளி march – 24 -ல் சித்திரை -1 தொடங்க வேண்டும். இப்பொழுது சூரியன் மூன்று திகிரி நகர்ந்து விட்டது, என தெரிந்து கொள்வதற்காக சமநாளில் இருந்து மூன்று நாட்கள் தள்ளி வைப்போம். இப்படியே 30 திகிரி அதாவது ஒரு ராசி கடந்தால் நம் தேதி சமநாளில் இருந்து 30 நாட்கள் தள்ளி ஏப்ரல் – 21 -க்கு வந்து இருக்கும். எனவே சூரியன் 30 திகிரி தள்ளி மேசத்தில் இருந்து மீனத்திற்கு வந்துவிட்டது , என்றால் 1800 ஆண்டுகள் கழித்து இதே போல் ஒவ்வொரு 60 ஆண்டுகளுக்கும் ஒரு தேதி சென்று கொண்டே இருந்தால் பருவம் ஒரு மாதம் தப்பும் என்பதால். 1800 ஆண்டுகள் அதாவது 30 தேதி முன்னோக்கி வந்த பிறகு மீண்டும் சமநாள் நோக்கி 30 நாட்களை பின் நகர்த்தி, மீண்டும் சமநாளில் இருந்து சித்திரை -1 ஆரம்பிக்க வேண்டும். இது நம் தமிழ் மரபு. ஆனால் 420 ஆண்டுகளுக்கு முன்பு சித்திரை -1 ஏப்ரல் – 14-ல் இருந்தது. அப்பொழுது நம் கோயில்கள் நம் கைகளில் இருந்து ஆரியர்களின் கைகளுக்கு விசய நகரப் பேரரசால் மாறியதால், நம் 60 சுழல் ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு தேதி மாறும் வளமை நிறுத்தப்பட்டது. ஏனென்றால் நம் தேதி மாறும் வளமை அவர்களுக்கு தெரியாது. அது எதற்காக என்றும் தெரியாது. அவர்கள் மணிகளை ஆட்டி பூசை செய்து தட்டில் காசு வாங்குவது மட்டும் குறியாய் இருந்தார்கள். கோயில்களில் தான் காலண்டர் தயாரிக்க வேண்டும் என்பது அறியாமல் கடந்த 420 ஆண்டுகளாக நம் தமிழ் காலண்டர் திருத்தப்படாமல் சித்திரை -1 ஏப்ரல் – 14 – லிலேயே உள்ளது. இப்பொழுது ஒவ்வொரு 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை சித்திரை -1 தேதியை அதிகப்படுத்தி இருந்தால் இப்பொழுது சித்திரை -1 ஏப்ரல் 22 -ல் இருந்து இருக்கும். சமநாளில் இருந்து 31 – நாள் தள்ளுவதால் நாம் மீண்டும் சித்திரை -1 ஐ சமநாளான march – 21 க்கு மாற்றி இருக்க வேண்டும். இனி இது ஒவ்வொரு 60 சுழல் ஆண்டுகளுக்கு ஒரு முறை தேதி முன்னே செல்லும். இப்படி 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேதி மாற்றுவது நம் சூரியனின் நகர்வை புரிந்து கொள்வதற்காக .நாம் 20,000 ஆண்டுகளாக சூரிய நகர்வை அவதானம் செய்த அறிவை இந்த 13 தலை முறைகளாக செய்யாமல் மறக்கடிக்கப் பட்டோம். இதை கோயில்களில் கருவறையிலிருந்து கொடி மரத்தின் வழியாக பார்த்தால் மீனராசி கொடி மரத்தை வெட்டிக் கொண்டி 24 திகிரி சாய்ந்த வட்டப் பாதையாக 12 ராசிகள் இருப்பதை பார்க்கலாம். முதல் ராசியாக வானில் மீனம் முழுதாக நகர்ந்து விட்டது. இவர்கள் சொல்வது போல மேசராசி 24 திகிரி தான் நகர்ந்துள்ளது என்பது தவறு. அது ஏப்ரல் – 21 -க்கு வந்து விட்டது. நம் சித்தரியல் நாட்காட்டி march – 21 சமநாளில் சித்திரை – 1 தொடங்குவது ஏதோ சாதாரண சூரிய நாட்காட்டி march – 21 சமநாளில் சித்திரை -1 தொடங்குவது போன்றது அல்ல. நம் தமிழர் நாட்காட்டி சூரிய நகர்வையும் உள் அடக்கியது.
காலப்புருசன் எப்பொழுதும் மேசத்திலேயே இருக்க மாட்டார். ஒவ்வொரு 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியன் ஒரு திகிரி பின்னோக்கி நகர்ந்து இப்பொழுது காலப்புருசன் மீனராசிக்கு வந்து விட்டார். இன்னும் 1800 ஆண்டுகள் கடந்தால் காலப்புருசன் கும்ப ராசிக்கு சென்று விடுவார். எனவே இந்த 2020 march – 21 – ல் இருந்து காலப்புருசன் மீனராசிக்குள் வந்து விட்டார். எனவே நம் சித்தரியல் நாட்காட்டியை சமநாளுக்கு சித்திரை -1 என மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பருவம் ஒரு மாதம் தப்பிவிட்டது. அதனால் தான் இன்று மார்கழி – 1 என கூறுகிறோம். அடுத்த 60 ஆண்டுகள் கழித்து november- 22 – ஐ மார்கழி – 2 என தள்ள வேண்டும்.
இப்படி நம் கோயில்கள் செய்ய வேண்டிய முறைகள் அவர்களுக்குத் தெரியாததால். நாம் நம் வீடுகளில் ஒரு கொடி மரம் நட்டு அதன் வழியே நிழல் கவனித்து , வான் பார்க்கப் பழகி சூரிய நகர்வை புரிந்து கொள்ள முயற்சிப்போம்.
இன்று முதல் முன்பனி காலம் ஆரம்பிக்கிறது. வரும் மார்கழி – 13 – பௌர்ணமியில் Dec-4- ல் கர்ப்போட்டம் ஆரம்பிக்கிறது. 11 நாட்கள் கர்ப்போட்டம் பார்க்க வேண்டும். இந்த கர்ப்போட்ட நாட்களில் நம் தலைக்கு மேல் இருக்கும் மேக நகர்வுகளை குறிப் பெடுத்து வைத்தால் அடுத்து வரும் ஆடி மாதத்திலிருந்து ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை மார்கழி மழை பொழிவுகளை அறிந்து கொள்ள முடியும். எனவே கர்ப்போட்டத் தரவுகளை இரவு பகல் பாராமல் துள்ளியமாக குறிக்க தயாராக வேண்டும். அவரவர் வீடுகளில் சர்க்கரை பொங்கல் தயாரித்து சாப்பிட்டுக் கொண்டே கர்ப்போட்ட தரவுகளை வரும் மார்கழி பௌர்ணமியிலிருந்து 11 நாட்கள் எடுக்க தயாராக இருப்போம்.
கார்த்திகை தீபம் காற்று மாறுவதை அறிந்து கொள்வதற்கான பண்டிகை. அது முடிந்து விட்டது. வரும் பௌர்ணமி மார்கழி பௌர்ணமி.
வரும் Dec-22 ,23 நமது விண்ணியலும் வாழ்வியலும் என்ற வகுப்பு நமது ஆமியார் தோட்டத்தில் , பொங்கல் கொண்டாட்த்துடன் மிக சிறப்பாக நடை பெற உள்ளது. Astronomy பற்றி அறியும் ஆர்வம் உள்ளவர்கள் இந்த நேரடி வகுப்பில் கலந்து கொண்டு கதிர் திருப்ப நாள் பற்றி புரிந்து கொண்டு பொங்கல் விழாவினை சிறப்பாக கொண்டாடுவோம் வாருங்கள்.
Tags: திருவிழா
No Comments