ராசி கட்டத்தில் உள்ள ராசிகளில் சூரியன் ஒரு கட்டத்தை (30 திகிரி) கடக்க தோரயமாக 30 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. ஆனால் உண்மையில் பூமி சூரியனை சுற்றி வரும் கணக்கு தான் அது. வானில் நாம் பூமியிலிருந்து பார்க்கும் போது சூரியன் நகர்வது போல் ஒரு மாயத்தோற்றத்தை மாற்றாமல் நம் முன்னோர்கள் அந்த கணக்கை சூரியனாகவே பாவித்தார்கள்.
உண்மையில் பூமிதான் சூரியனை 24 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. கட்டங்களில் பூமி விடுபட்டு இருப்பதை கவனிக்கலாம்.
அதே போல நிலா பூமியை 30 திகிரி சாய்ந்த வட்டப்பாதையில் சுற்றி வருவதை கண்கூடாக நிலவின் உதயத்தை 30 நாட்கள் தொடர்ந்து கவனித்தால் புரியும்.
சூரியனின் அச்சு 66 திகிரி சாய்ந்த நம் பால் வெளியின் அண்ட வட்டப் பாதையின் மையத்தை நோக்கி இருக்கும். அதிலிருந்து நம்பூமி 24 திகிரி விலகி 90 திகிரி நடுப்புள்ளியில் பூமியின் அச்சு இருக்கும்.
அதாவது வாண் மத்திய ரேகை – 0 விலிருந்து 66 திகிரி விலகி சூரியனின் அச்சு இருக்கும். அதிலிருந்து 24 திகிரி விலகி 90 திகிரியில் பூமியின் அச்சு இருக்கும். அதாவது சூரியன் பூமியிலிருந்து பார்க்கும் போது 33.33 திகிரி சாய்ந்த வட்டப்பாதையில் கருமையத்தை வலம் வரும். சூரியனின் நகர்வு பூமி நகர்வின் எதிர் திசையில் இருக்கும்.
கருமையம் தான் நம் சூரியனை அண்ட மலர்வு உதயமான இடத்தை நோக்கி பின் நகர வைக்கிறது. அந்த சக்தி மையம் நேர் பாதையில் செல்வதில்லை எனவும் நம் முன்னோர்கள் வழிவழியாக அவதானித்து அறிந்து இருக்கிறார்கள்.
அதாவது கருமையத்தின் நகர்வு 37 திகிரி சாய்ந்த வட்டப்பாதை.
பூமி – 24 திகிரி
நிலா – 30 திகிரி
சூரியன் – 33.33திகிரி
கருமையம் – 37திகிரி
சாய்ந்த வட்டப் பாதையில் சுற்றிக் கொண்டே அண்ட மையமான சிவத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. இப்படி கோடிக்கணக்கான சூரியன்களை கோடிக்கணக்கான சக்தி மையங்கள் பின் நோக்கி ஒரே வேகத்தில் அண்ட மையத்தை நோக்கி நான்கு கரங்களிலும் செல்வதால் எதுவும் நகராதது போல் தெரிகிறது.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments