நிலவின் ஓட்டத்தை வளர்பிறை , தேய்பிறை, அமாவாசை, பெளர்ணமி என திதிகளாக்கி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். திதிகளை சாவுக்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள் இந்த சாவுகிராக்கிகள். ஆனால் இந்த திதிகள் தான் நம் சூரிய குடும்பத்தின் அத்தனை கோள்களின் இயக்கங்களையும் துல்லியமாக கனிக்க உதவுகிறது.
நிலவின் ஒரு திதி என்பது நிலவின் 13 திகிரி நகர்வை குறிக்கிறது. நிலவு 30 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் வருகிறது. ஆனால் பூமி தன்னை தானே சுற்றுவது நேராக இருப்பதால் ஒவ்வொரு திதியின் காலம் வேறுபடுகிறது.
ஆனால் நிலவு பூமியை ஒரு சுற்று வர 27 திதிகள் ஆகிறது. பௌர்ணமி to பௌர்ணமி யோ அல்லது அமாவாசை to அமாவாசை யோ 30 திதி ஆகிறது.
இந்த திதி கணக்கு இந்த காலத்தில் தேவையா , நாட்கள் வருச கணக்குகள் சரியாக வராதா? என நான் யோசித்தது உண்டு!.
ஆனால் நம் தமிழ் எழுத்துக்கள் 247 மற்றும் திருக்குறளின் 133 எனும் என்னும் திதி கணக்குகளுக்குள் அடங்குவதைப் பார்த்து வியந்து போனேன்.
சிவன் உருவாக்கிய திதி காலக் கணக்கு தான் இன்றும் சிறப்பாக துல்லியமாக பொருந்தி வருகிறது. அவன் சரியான காலன் தான். இவர்களுக்கு சாவு மணி அடிக்கும் காலன்.
ஆண்டு கணக்கு என்பது நிலவின் 12 மாசங்களை குறிக்கும். மாசம் என்பது 30 திதிகள்.
திங்கள் என்பது 27 திதி. 12 திங்கள் சேர்ந்தது ஒரு வருடம்.
370.37 (365.25 நாட்கள்) திதிகள் ஒரு வருசம் . மாதம் என்பது 29, 30, 31,32. என மாதத்தின் தேதிகள் மாறுபடும்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments