இவையெல்லாம் 420 வருசங்களுக்கு முன்னால் நம் கோயில்களில் நாம் இருந்தவரை நடந்தவைகள்.

இவையெல்லாம் 420 வருசங்களுக்கு முன்னால் நம் கோயில்களில் நாம் இருந்தவரை நடந்தவைகள்.

நிலவு 27 திதியில் பூமியை 360 திகிரி பாதையில் ஒரு சுற்று வந்து விடும். இந்த 27 திதியை 27 நட்சத்திரங்களாக வானில் வடித்தார்கள். மறுபடியும் 3 திதி கடந்து பௌர்ணமி ஆக மாறும்.

27 + 3 = 30 திதியில் ஒவ்வொரு பௌர்ணமியும் வரும். 27 திதியை ஒரு திங்கள் என்றும். 12 திங்கள் சேர்ந்தது அதாவது 12 x 27 = 324 திதியை ஒரு வருடை அல்லது வருடம் என்றும்,

30 திதியை ஒரு மாசம் என்றும் 12 மாசங்கள் சேர்ந்தது ஒரு ஆண்டு அல்லது சந்திரமான ஆண்டு என நிலவின் ஓட்டத்தை வகைப் படுத்தினார்கள் நம் முன்னோர்கள்.

அதே போல் பூமி சூரியனை சுற்றுவதை 365.25 நாட்கள் அல்லது 370.37 திதி என கணக்கிட்டார்கள். பூமியின் சுற்றை அறிவதற்கு ராசியை உருவாக்கி ஒவ்வொரு ராசிக்கும் 30 திகிரி கொடுத்து 12 ராசிகளுக்கு 12 x 30 = 360 திகிரியில் பூமி வலம் வருவதை கணக்கிட்டார்கள். ஒவ்வொரு ராசியிலும் , பூமி 29 , 30, 31 அல்லது 32 நாட்களில் கடப்பதை மாதம் என குறிப்பிட்டார்கள். 12 மாதங்களில் 360 திகிரியை கடக்கும் ஆனால் 365.25 நாட்கள் ஆனது அல்லது 370.37 திதிகள் ஆனது. இதை வருசம் அல்லது சூரியமான ஆண்டு என கணக்கிட்டார்கள்.

இது சூரியன் சுற்று பூமியின் சுற்றுக்கு எதிர் திசையில் இருப்பதால் நடக்கிறது என புரிந்து கொண்டார்கள்.

இப்படி நிலவின் ஓட்டத்தை திங்கள், வருடம் என்றும்.

மாசம் , சந்திரமான ஆண்டு எனவும்,

பூமியின் ஓட்டத்தை மாதம், வருசம் எனவும் வகைப் படுத்தினார்கள்.

இதையெல்லாம் ஒவ்வொரு கோயில்களிலும் கருவரையிலிருந்து கொடி மரத்தின் வழியாக ஒவ்வொரு ஊர்களிலும் பூசாரிகள் கணக்கிட்டார்கள். அந்தந்த ஊர்களுக்கு காலண்டர் தயாரிப்பது அந்தந்த ஊர்களின் பூசாரிகளாக இருந்தார்கள்.

ஒவ்வொரு நாள் 6 கால பூசைகளிலும் , நிலவின் ஓட்டத்தையும், சூரியன், மற்றும் கோள்களையும், கருவரையில் இருந்து கொடி மரத்தின் வழியாக கணித்தார்கள்.

இதை ஒவ்வொரு மகா சிவராத்திரிகளில் எல்லா பூசாரிகளும் சேர்ந்து பெரிய சிவன் கோயில்களில் இரவு முழுதும் கண் விழித்து சரி பார்த்துக் கொண்டார்கள். அவரவர் புரிதல் சரியா ? தவறா? என விவாதித்து தெளிந்து கொள்வார்கள்.

இவையெல்லாம் 420 வருசங்களுக்கு முன்னால் நம் கோயில்களில் நாம் இருந்தவரை நடந்தவைகள்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *