நமது விண்ணியலும் வாழ்வியலும்

நமது விண்ணியலும் வாழ்வியலும்

விண்ணியலும் வாழ்வியலும்:

நிலவின் ஓட்டத்தை வளர்பிறை , தேய்பிறை, அமாவாசை, பெளர்ணமி என திதிகளாக்கி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர்கள். திதிகளை சாவுக்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள் இந்த சாவுகிராக்கிகள். ஆனால் இந்த திதிகள் தான் நம் சூரிய குடும்பத்தின் அத்தனை கோள்களின் இயக்கங்களையும் துல்லியமாக கனிக்க உதவுகிறது.

நிலவின் ஒரு திதி என்பது நிலவின் 13 திகிரி நகர்வை குறிக்கிறது. நிலவு 30 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் வருகிறது. பூமி தன்னை தானே சுற்றுவது நேராக இருப்பதால் ஒவ்வொரு திதியின் காலம் வேறுபடுகிறது.

நிலவு பூமியை ஒரு சுற்று வர 27 திதிகள் ஆகிறது. பௌர்ணமி to பௌர்ணமியோ அல்லது அமாவாசை to அமாவாசையோ 30 திதி ஆகிறது.

இந்த திதி கணக்கு இந்த காலத்தில் தேவையா , நாட்கள் வருச கணக்குகள் சரியாக வராதா? என நான் யோசித்தது உண்டு!.

ஆனால் நம் தமிழ் எழுத்துக்கள் 247 மற்றும் திருக்குறளின் 133 எனும் என்னும் திதி கணக்குகளுக்குள் அடங்குவதைப் பார்த்து வியந்து போனேன்.

சிவன் உருவாக்கிய திதி காலக் கணக்கு தான் இன்றும் சிறப்பாக துல்லியமாக பொருந்தி வருகிறது. அவன் சரியான காலன் தான். இவர்களுக்கு சாவு மணி அடிக்கும் காலன்.

ஆண்டு கணக்கு என்பது நிலவின் 12 மாசங்களை குறிக்கும். மாசம் என்பது 30 திதிகள்.

திங்கள் என்பது 27 திதி. 12 திங்கள் சேர்ந்தது ஒரு வருடம். 12×27 = 324 திதிகள்.

370.37 (365.25 நாட்கள்) திதிகள் ஒரு வருசம் . மாதம் என்பது 29, 30, 31,32. என மாதத்தின் தேதிகள் மாறுபடும்.

360 திதி என்பது 354 நாட்கள் கொண்ட சந்திரமான ஆண்டு கணக்கு.

370.37 திதி என்பது ஒரு வருசம் (365.25 நாட்கள்) என்பது சூரியமான ஆண்டு கணக்கு

247 சந்திரமான ஆண்டுகள் என்றால் 247 x 360 திதி =

88, 888.888 திதிகள்.

88,888.888 திதிகளை 370.37037 எனும் வருசத் திதியை வகுத்தால் 240 வருசங்கள். அதாவது 247 சந்திரமான ஆண்டுகள் = 240 வருசங்கள்.

247 ஆண்டுகள் என்பது 246.91 என்ற எண்ணின் 247 என்ற முழு எண்ணாக்கினார்கள் நம் முன்னோர்கள்.

இந்த 247 ஆண்டுகள் என்பது சூரியனின் ஒரு பாத நகர்வு ஆகும். சூரியன் 108 பாதம் நகர 108 X 246.91 = 26, 666.666 சந்திரமான ஆண்டுகள்.

அதாவது

26, 666.660×360 திதி = 96,00,000 திதிகள்.

இந்த 96,00,000 திதிகளை வருசக் கணக்காக (சூரியமான ஆண்டாக) மாற்றினால்

96,00,000 / 370.37

= 25, 920, வருசங்கள்.

அதாவது சூரியன் கருமையத்தை ஒரு முறை சுற்றி வர

25, 920 வருசங்கள் அல்லது

26, 666.666 சந்திரமான ஆண்டுகள்.

நம் திருக்குறளில் உள்ள 1330 என்பது ஆண்டு கணக்கு தான். இதில் விடுபட்ட எண் 3.333

1330 + 3.33 = 1333.33

இது சூரியன் ஒரு வீடு கடக்க எடுக்கும் காலம் ஆகும். 1333.33 x 360 = 4, 80,000 திதிகள். இதை வருசம் ஆக மாற்ற 4,80,000/370.37037

= 1296 வருசங்கள்.

சூரியன் ஒரு வீடு கடக்க 1296 வருசங்கள் ஆகும்.

ஒரு வீடு என்பது சக்தி மையத்தின் ஒரு திகிரி நகர்வு.

அதாவது சூரியன் 20 வீடுகளை கடந்தால் ஒரு சுற்று வந்து விடும்.

நிலவு பூமியை சுற்ற 27 நட்சத்திரங்கள்.

பூமி சூரியனை சுற்ற 12 மாதங்கள்.

சூரியன் கருமையத்தை சுற்றி வர 20 வீடுகள்.

20×1333.333 = 26,666.66 ஆண்டுகள் அல்லது 20 x 1296 = 25, 920 வருசங்கள்.

சூரியனின் ஒரு வீடு என்பது 18 படிகளை கொண்டது.

1296 / 18 = 72 வருசங்கள்

1333.33/18 = 74.074 சந்திரமான ஆண்டுகள்

72 வருசம் =

74.074 ஆண்டுகள்.

72 x 360 திகிரி =

25, 920 வருசங்கள்.

நம் முன்னோர்கள் சூரிய நகர்வு ஒரு திகிரி நகர 72 ஆண்டுகள் ஆகும் போது ஏன் 60 சூழல் ஆண்டு கணக்கை வைத்தார்கள் ?

சூரியன் ஒரு பாதம் நகர 247 ஆண்டுகள் அல்லது 240 வருசங்கள்.

240/60 = 4

247 ஆண்டுகளில் 3.333 திகிரி சூரியன் நகரும். அல்லது 240 வருசங்களில் 3.33 திகிரி நகரும். இதை பூமியிலிருந்து பார்க்கும் போது

4 x 60 = 240 வருசங்களாகிறது. அதாவது சூரியன் 3.33 திகிரி நகர்வது பூமியிலிருந்து சூரியனுடன் நகர்ந்து கொண்டே பார்ப்பதால் 4 திகிரி நகர்ந்ததாக தெரியும். ஆனால் சூரியன் ஒரு பாதம் தான் நகர்ந்து இருக்கும்(3.33 திகிரி).

32 x 60 வருசம் = 1920 வருசத்தில் பூமியிலிருந்து சூரியனை பார்க்கும் போது 30 திகிரி ராசிகளில் நகர்ந்தது போல் தெரியும். ஆனால் உண்மையில் சூரியன் இரண்டு நட்சத்திரங்களைத்தான் கடந்து இருக்கும் . இன்னும் ஒரு பாதம் செல்ல வேண்டி இருக்கும். ஏன் என்றால் சூரியன் 33.33 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் சக்தி மையத்தை சுற்றி வருகிறது. எனவே சூரியனின் பாதை பூமியிலிருந்து பார்க்கும் போது ராசியில் 32 x 60 = 1920 ஆண்டுகள் ஒரு ராசியை கடந்தது போல் தெரியும். ஆனால் இன்னும் ஒரு பாதம் நகர வேண்டி இருக்கும். எனவே ஒரு பாதத்தை முன் நகர்த்தி ராசிக்காக நாம் அசுவினியில் இருந்து இரண்டு நட்சத்திரம் ரேவதி, உத்திரட்டாதி என இரண்டு நட்சத்திரங்களை மட்டும் நகர்த்தி காலப் புருசனை 1920 வருசங்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்க வேண்டும். இன்னும் 240 வருசங்களில் சூரியன் 30 திகிரி நகர்ந்து விடும்.

1920/72 = 26.666 திகிரி சூரியன் கடந்த கணக்கு . ஆனால் ராசியில் சூரியனுடன் 33.33 சாய்ந்த வட்டப்பாதையில் சூரியன் செல்கிறது. பூமி 24 திகிரி சாய்ந்த வட்டப் பாதையில் செல்வாதால் சூரியன் 26.66 திகிரி கடக்கும் போதே பூமி 30 திகிரி வரை சென்றது போல் தெரியும். 33.33 திகிரி சாய்ந்த வட்டப்பாதையில் தான் 27 நல்சித்திரங்கள் இருக்கிறது. 24 திகிரி பூமியின் பாதையைத் தான் ராசியாக பிரித்தார் நம் திருமால். ராசி உருவானது 4000 ஆண்டுகளுக்கு முன்புதான். ஆனால் நட்சத்திரம் சிவன் காலத்திலேயே அதாவது 20,000 ஆண்டுகளுக்கு முன்பே சூரிய நகர்வின் அடிப்படையில் உருவாக்கப் பட்டு இருக்கிறது.

எனவே 1920 ஆண்டுகளுக்குப் பிறகு நாம் பஞ்சாங்கம் மாற்றி அமைத்து காலப் புருசனை மீனத்துக்கு மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நம் கோயில்களில் 420 வருசங்களுக்கு முன்பு விசய நகர அரசு அமைந்த போது உள்ளே புகுந்தவர்களுக்கு , 420 ஆண்டுகளுக்கு முன்பு வரை பூமி உருண்டை என தெரியாதவர்களுக்கு பஞ்சாங்க கணக்குகளை இதை அமைக்கத் தெரியாது. எனவே நாம் அனைவரும் சேர்ந்து தான் இந்த கணக்குகளைப் புரிந்து பஞ்சாங்க கணக்குகளை மாற்றி நம் தமிழ் மக்களை ஜாதம் எனும் மாயையிலிருந்து விடுவித்து , உண்மையான சோதிடம் நோக்கி நகர வழிவகை செய்ய வேண்டும்.

சோதி (சூரியன்) இருக்கும் இடம் தெரிந்தவன் தான் சோதிடன்.

இந்த 370.37 திதிகள் ஒரு வருசம் ஆகும். இதுவே பூமியின் சுற்றளவுக்கான ஒரு பாதம் ஆகும். 108 X 370.37 = 40,000 K.M.

இப்படி பூமி காலத்தாலும், தூரத்தாலும், வேகத்தாலும், சரியான இடத்தில் அமைந்து இருப்பதால் தான் இங்கு உயிரினங்கள் தோன்றி உள்ளது.

பூமியின் வேகம் 29.5 K.M/S.

இது நிலவு பூமியை சுற்ற எடுக்கும் காலம் 29.5 நாட்கள். அல்லது 30 திதி.

கலி ஆண்டு 5126 என்பது சூரியமான ஆண்டு அதாவது வருசம் அல்லது year. ஐத்தான் குறிக்கும். 5126 ஆண்டுகளுக்கு முன் மகாபாரதப் போர் நடந்த பிறகு கலியுகம் 5000 ஆண்டுகள் இருக்கும் என கிருட்டிணன் மகாபாரத வெற்றிக்குப் பின் கூறி உள்ளார். இதை எப்படியோ நம் முன்னோர்கள் நமக்கு கடத்தி கொடுத்து இருக்கிறார்கள். இந்த வருச கணக்கை வைத்துப் பார்த்தால் , நமக்கு

இதன் படி 1900 – த்திலேயே மேச ராசியிலிருந்து மீனராசிக்கு வந்து விட்டது போல இருக்கிறது.

2020 – ல்

சித்திரை – 1 இரண்டு 60 வருசங்களை கடந்து இருக்கிறது.

எனவே சமநாளில் இருந்து இரண்டு நாட்களை முன் தள்ளி march – 23- ல் சித்திரை – 1 ஆரம்பிக்க வேண்டி இருக்கும் போல இருக்கிறது.

இது நான் முன் வைக்கும் கருத்து

நிலவு 27 திதியில் பூமியை 360 திகிரி பாதையில் ஒரு சுற்று வந்து விடும். இந்த 27 திதியை 27 நட்சத்திரங்களாக வானில் வடித்தார்கள். மறுபடியும் 3 திதி கடந்து பௌர்ணமி ஆக மாறும்.

27 + 3 = 30 திதியில் ஒவ்வொரு பௌர்ணமியும் வரும். 27 திதியை ஒரு திங்கள் என்றும். 12 திங்கள் சேர்ந்தது அதாவது 12 x 27 = 324 திதியை ஒரு வருடை அல்லது வருடம் என்றும்,

30 திதியை ஒரு மாசம் என்றும் 12 மாசங்கள் சேர்ந்தது ஒரு ஆண்டு அல்லது சந்திரமான ஆண்டு என நிலவின் ஓட்டத்தை வகைப் படுத்தினார்கள் நம் முன்னோர்கள்.

அதே போல் பூமி சூரியனை சுற்றுவதை 365.25 நாட்கள் அல்லது 370.37 திதி என கணக்கிட்டார்கள். பூமியின் சுற்றை அறிவதற்கு ராசியை உருவாக்கி ஒவ்வொரு ராசிக்கும் 30 திகிரி கொடுத்து 12 ராசிகளுக்கு 12 x 30 = 360 திகிரியில் பூமி வலம் வருவதை கணக்கிட்டார்கள். ஒவ்வொரு ராசியிலும் , பூமி 29 , 30, 31 அல்லது 32 நாட்களில் கடப்பதை மாதம் என குறிப்பிட்டார்கள். 12 மாதங்களில் 360 திகிரியை கடக்கும் ஆனால் 365.25 நாட்கள் ஆனது அல்லது 370.37 திதிகள் ஆனது. இதை வருசம் அல்லது சூரியமான ஆண்டு என கணக்கிட்டார்கள்.

இது சூரியன் சுற்று பூமியின் சுற்றுக்கு எதிர் திசையில் இருப்பதால் நடக்கிறது என புரிந்து கொண்டார்கள்.

இப்படி நிலவின் ஓட்டத்தை திங்கள், வருடம் என்றும்.

மாசம் , சந்திரமான ஆண்டு எனவும்,

பூமியின் ஓட்டத்தை மாதம், வருசம் எனவும் வகைப் படுத்தினார்கள்.

இதையெல்லாம் ஒவ்வொரு கோயில்களிலும் கருவரையிலிருந்து கொடி மரத்தின் வழியாக ஒவ்வொரு ஊர்களிலும் பூசாரிகள் கணக்கிட்டார்கள். அந்தந்த ஊர்களுக்கு காலண்டர் தயாரிப்பது அந்தந்த ஊர்களின் பூசாரிகளாக இருந்தார்கள்.

ஒவ்வொரு நாள் 6 கால பூசைகளிலும் , நிலவின் ஓட்டத்தையும், சூரியன், மற்றும் கோள்களையும், கருவரையில் இருந்து கொடி மரத்தின் வழியாக கணித்தார்கள்.

இதை ஒவ்வொரு மகா சிவராத்திரிகளில் எல்லா பூசாரிகளும் சேர்ந்து பெரிய சிவன் கோயில்களில் இரவு முழுதும் கண் விழித்து சரி பார்த்துக் கொண்டார்கள். அவரவர் புரிதல் சரியா ? தவறா? என விவாதித்து தெளிந்து கொள்வார்கள்.

நம் கோயில்கள் 420 ஆண்டுகளுக்கு முன்பு வரை சூரியன், பூமி, நிலவு பாதைகளை கணக்கிடுவது மட்டுமல்ல , 64 கலைகளும், சொல்லித் தரும் கல்வி கற்கும் ஆசான் பள்ளிகளாக இருந்தது. 64 வகையான தொழில்களில் தேர்ந்த சித்தர்கள் கோயில்களில் ஆசான்களாக ஒவ்வொரு ஊர்களுக்கும் சென்று கற்றுத் தருவார்கள், நம் மக்கள் ஆங்காங்கே அந்தந்த ஊர்களில் கற்றுக் கொள்வார்கள்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *