கலியாண்டு என்பது இப்பொழுது 5126 என போட்டுக் கொண்டு உள்ளோம்

கலியாண்டு என்பது இப்பொழுது 5126 என போட்டுக் கொண்டு உள்ளோம்

கலியாண்டு என்பது இப்பொழுது 5126 என போட்டுக் கொண்டு உள்ளோம். இந்த கணக்கின் படி நம் திருவில்லிப்புத்தூரைச் சேர்ந்த கிருட்டிணன் சமாதி ஆகி 5126 வருசங்கள் (365.25 நாட்கள் அல்லது 370.37 திதி) ஆகிவிட்டது.என அர்த்தம். இதன் படி கொண்டால் மேச ராசியில் சூரியன் பயணிக்க ஆரம்பித்த வருசம் கி.மு 120 ஆக இருக்க வேண்டும். சூரியன் 32 கரணங்கள் கடந்து அதாவது ஒரு கரணம் என்றால் 60 வருசங்கள். 32 கரணங்கள் கடந்தால் 32 x 60 = 1920 வருசங்கள் கழித்து கி.பி. 1900-த்தில் , கிருட்டிணன் இறந்து 5000 வருசங்கள் ஆகிவிட்டது என்றாகிறது. கிருட்டிணன் தான் சமாதி அடையும் நாளிலிருந்து கலியுகம் முடிய 5,000 வருசங்கள் ஆகும் என கூறி இருப்பது கி.பி 1900 – களிலிலேயே முடிந்து விட்டது என்றால் மீனயுகம் தொடங்கி 126 ஆகி விட்டது என ஆகிறது.

மாறாத 4 கரணங்கள்.

1.பவம் – மனம்

2.பாலவம் – புத்தி

3.கௌலவம் – சித்தம்

4.தைதுலம் – அகங்காரம்.

மாறக்கூடிய 7 கரணங்கள்

1.கரசை – மூலாதாரம்

2.வணசை – சுவாதிட்டானம்

3.சகுதை – மணிப்பூரகம்

4.பத்திரை – அனாகதம்

5.சதுச்பாத்- விசுத்தி

6.நாகவம் – ஆங்யா

7.கிம்சுதுக்கினம்-சகசராரம்

இப்பொழுது சோதிடர்கள் அனைவரும் சொல்லி வைத்தாற்போல் யோகம் என்றால் ஒரு திதி என்றும் கரணம் என்றால் பாதி திதி என்றும் கூறி வருகிறார்கள். யோகமும் கரணமும் தின நிகழ்வு போலவும் பஞ்சாங்கத்தில் நாழிகை முதற்கொண்டு கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் யோகம் என்பது ஒரு திதி தான். அதாவது சந்திரன் ஒரு நாளில் பயனிக்கும் 13 டிகிரி 2 நிமிடம் தூரத்தை சூரியன் கடக்கும் காலத்தை தான் யோகம் என்று மூன்றாம் தமிழ்ச் சங்கத்தில் கணித்தார்கள். 27 யோகங்களில் அதாவது 60 வருசங்களில் புவனத்தில் சூரியன் கடக்கும் தூரம் 1 டிகிரி தான். அதாவது பூமி ஒரு நாளைக்கு 1 டிகிரி கடப்பதை போல் சூரியன் 1 டிகிரி கடக்க 60 வருசங்கள் எடுத்து கொள்கிறது. இந்த ஒரு டிகிரி கடக்க 27 யோகங்களை கடந்து 1 கரணம் அடித்தால் 60 ஆண்டுகள் ஆகிறது.

இப்படி 32 கரணங்கள் கடந்தால் 30 டிகிரியை சூரியன் கடந்து செல்லும் இந்த 30 டிகிரி தான் ஒரு ராசியின் காலம். இந்த 30 டிகிரியை கடக்க சூரியன் எடுத்து கொள்ளும் காலம் 32 × 60= 1920 ஆண்டுகள். இந்த 30 திகிரியைத் தான் 30 நாழிகை என்று கொண்டு பாதி திதி என்று பிதற்றுகிறார்கள். இப்படி சூரியன் 32 கரணங்களை கடந்தால் ஒரு யுகம் என வகுத்தார்கள். இப்படி கணித்ததற்கு பின்னால் ரிதப யுகம் முடிந்து மேச யுகம் இவ்வளவு காலம் இருந்தது. 1900 மார்ச் 22ல் 3 வதாக மீன யுகம் பிறந்துள்ளது.

இந்த 32 கரணங்களுக்கு பெயர் கொடுக்க வேண்டும் என்பதற்காக விவாதித்து அந்த கரணங்கள் நான்கையும், 7 சக்கரங்களின் பெயர்களையும் எடுத்து வரிசை படுத்தினார்கள். முதல் 60 ஆண்டுகளை மனம் என்றும், அடுத்த 7 X 60 அமைத்திருக்கிறார்கள். சக்கரங்களை கொண்டும்

ஆண்டுகளை

1.பவம் – மனம்

2.கரசை – மூலாதாரம்

3.வனசை – சுவாதிட்டானம்

4.சகுதை – மணிபூரகம்

5.பத்திரை – அனாகதம்

6. சதுச்பாத் – விசுத்தி

7.நாகவம் – ஆங்யா

8.கிம்சுதுக்கினம்- சகசராரம்

9.பாலவம் – புத்தி

10.கரசை – மூலாதாரம்

11. வனசை = சுவாதிட்டானம்

12.சகுதை – மணிபூரகம்

13.பத்திரை – அனாகதம்

14. சதுச்பாத் – விசுத்தி

15.நாகவம் – ஆங்யா

16.கிம்சுதுக்கினம்- சகசராரம்

17.கௌலவம் – சித்தம்

18.கரசை – மூலாதாரம்

19. வனசை – சுவாதி

20.சகுதை – மணிபூரகம்

21.பத்திரை – அனாகதம்

22. சதுச்பாத் – விசுத்தி

23.நாகவம் – ஆங்யா

24.கிம்சுதுக்கினம்- சகசராரம்

25.தைதலம் – அகங்காரம்

26.கரசை – மூலாதாரம்

27.வனசை – சுவாதிட்டானம்

28.சகுதை – மணிபூரகம்

29.பத்திரை – அனாகதம்

30. சதுச்பாத் – விசுத்தி

31.நாகவம் – ஆங்யா

32.கிம்சுதுக்கினம்- சகசராரம்

என்று 32 கரணங்களின் பெயர்களை வரிசைப் படுத்தியுள்ளார். இந்த மணம், புத்தி, சித்தம், அகங்காரம் என்பதை அந்தகரணங்கள் என்று ஏன் அழைத்தார்கள் என்றால் மனிதனுடைய பருவங்களை நாம் 6 பருவங்களாக வகுத்துள்ளோம். ஒவ்வொரு பருவங்களுக்கும் 12 வருசங்கள். மனிதனுடைய முதல் 2 பருவங்கள் மணம் தான் அதிக பங்கு கொண்டு உடலை வடிவமைக்கும். அதாவது 24 வயது வரை மணதால் இயங்கினால் உடலும் நன்றாக அமையும். அடுத்த 24 வயது முதல் 48 வயது வரை மனிதனுக்கு புத்தியின் ஆதிக்கம் அதிகம் இருக்க வேண்டும். அப்பொழுது தான் தனக்கு பிறந்த குழந்தைகளை ஆளாக்கி வளர்க்க முடியும். அதற்கு அடுத்த 2 பருவமான 48 முதல் 72 வயது வரை சித்த நிலையில் இயங்க வேண்டும் அப்பொழுதான் அடுத்த தலைமுறையை பாதுகாத்து வழிநடத்தும் பக்குவம் கிடைக்கும். சித்தம் என்றால் விருப்பு வெருப்பு இன்றி முடிவெடுக்கும் வல்லமை. இந்த 6 பருவங்களையும் மனிதன் நிறைவாக கடந்தால் தான் , அவன் நான் என்னும் அகங்காரத்தை விட்டொழிக்க முடியும். அகங்காரத்தை விட்டொழித்து சமுதாயத்திற்காக பொது வாழ்வில் ஈடுபட வேண்டும்.

Tags:

No Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *