2. திதி
திதி என்பதும் 20,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வழக்கத்தில் இருந்துள்ளது. திங்கள் நமது பூமியை 29.5 (30 திதி) நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகின்றது. அதே போல் நிலா தன்னைத் தானே சுற்றிக் கொள்வதற்கும் அதே 29.5 நாட்கள் அல்லது 30 திதிஆகிறது.
இந்த காரணத்தால் பூமியில் இருந்து நிலவின் ஒரு பகுதியை தான் நாம் பார்க்க முடியும் நிலவின் பின்பகுதியை நாம் பார்க்கவே முடியாது. அதனால் தான் நமது வழிவழியாக வரும் நிலா கதையில் கூட பாட்டி வடை சுடும் காட்சி எப்பொழுதும் தெரிந்து கொண்டு உள்ளது, வேறு வடிவங்களே தெரியாது.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலா வரும் பொழது அமாவாசையாகவும், நிலாவுக்கும் சூரியனுக்கும் இடையே பூமி வரும் பொழுது பெளர்ணமியாகவும் தெரிகிறது. நாம் பூமியிலிருந்து நிலவை பார்ப்பதால் தான் இந்த காட்சி. அமாவாசைக்கு அடுத்த நாளிலிருந்து வளர்பிறை, முதல் பிறை, இரண்டாம் பிறை, மூன்றாம் பிறை, நான்காம் பிறை இப்படி பதினைந்தாம் நாள் பௌர்ணமி ஆகும். பௌர்ணமிக்கு அடுத்த நாளிலிருந்து தேய்பிறையாகி 14 நாட்களுக்குப் பிறகு அமாவாசையாக மாறும். இதில் அமாவாசைக்கு பிறகு வளர்பிறை.
முதல் பிறை – பிரதமை, பாட்டிமை
இரண்டாம் பிறை = துவாதியை
மூன்றாம் பிறை – திரிதியை
நான்காம் பிறை – சதுர்த்தி
ஐந்தாம் பிறை – பஞ்சமி
ஆறாம் பிறை – சட்டி
ஏழாம் பிறை – சப்தமி
எட்டாம் பிறை – அட்டமி
ஒன்பதாம் பிறை – நவமி
பத்தாம் பிறை – தசமி
பதினொன்றாம் பிறை – ஏகாதசி
பன்னிரன்டாம் பிறை – துவாதசி
பதின்மூன்றாம் பிறை – திரியோதசி
பதினான்காம் பிறை – சதுர்தசி
அதற்கு அடுத்த நாளிலிருந்து தேய்பிறை. அதேபோல் மீண்டும் 14 அதே திதிகள் அதற்கு அடுத்த நாள் அமாவாசை. இப்படி இரண்டு 14 திதிகளைக் கூட்டி 28 நாட்கள் ஆன பின் ஒரு பௌர்ணமி, ஒரு அமாவாசை ஆக மொத்தம் 30 திதிகள். இதை ஒரு மாதமாக 12,,960 ஆண்டுகளுக்கு முன்பே வடிவமைத்துள்ளார்கள். ஆனால் நிலா, பூமியை சுற்ற 29.5 நாட்கள் தான். இதை சரி செய்ய சந்திர நாட்காட்டியில் முதல் மாதத்திற்கு 29 நாட்களும், இரண்டாம் மாதத்திற்கு 30 நாட்களும், மூன்றாம் மாதத்திற்கு 29 நாட்களாகவும் நான்காம் மாதம் 30 நாட்களாகவும் இப்படி 6 மாதங்கள் 29 நாட்களாகவும் 6 மாதங்கள் 30 நாட்களாகவும் ஆக மொத்தம் 12 மாதங்களுக்கு 354 நாட்கள். ஒரு வருடம் என்பதை 12 மாதங்களாக 354 நாட்கள் என வடிவமைத்துக் கொண்டார்கள். சந்திர நாட்காட்டியில் 12 அமாவாசையும் 12 பௌர்ணமிகளும் இருக்கும். நிலவின் ஒரு நாள் பயணத்தை 13 திகிரி நகர்வு ஒரு திதி என கொண்டார்கள். திதிகளின் காலம் ஒரே மாதிரி 24 மணி நேரம் என்று இருக்காது. ஒவ்வொரு திதியும் காலம் வேறுபடும். நிலவின் கிழக்கு தொடுவானத்தில் உதிக்கும் நேரம் தான் திதி.
இந்த திதி கணக்கில் தான் சூரியன் தன் 33.33 திகிரி சாய்ந்த வட்டப்பாதையில் ஒரு சுற்று சுற்றி வர 96,00,000 திதிகள் ஆகிறது என கணித்து இருக்கிறார்கள் நம் முன்னோர்கள்.
Tags: தமிழர்களின் விண்ணியல்
No Comments