324. விங்கு வென்ற அட்சரத்தின் வேட்டுவாகி கூ வுடன்.
சுங்கமாக சோமனோடு சோமன் மாறி நின்றிடும்,
அங்க மாமுனைச் சுழியில் ஆகும் ஏக வாகையாய்,
கங்குலற்று தியான முற்று காணுவாய் சுடரொளி!
மூலாதாரத்திலிருந்து வி(விந்து) எனும் அட்சரம் கணல் எழும்பி வேட்டுடன் சுழுமுனை எனும் முதுகுத்தண்டில் மேல் எழும்பி, கூ எனும் ஏழாவது சக்ரமான சகசராரம் எனும் கூமுட்டையுடன் ,
ஏற்றுமதியாகும் பொழுது மூச்சில் சிறு இழப்புடன் இட கலையுடன் , திங்கள் மாறி நின்றிடும். அங்கமா முனைச் சுழி என்பது தலையில் உள்ள உச்சி முனையில் ஆகும் ஏக வெற்றியுடன் பேரண்டத்தின் பேராற்றலை பெற்றால், அந்த முனையில் கங்கு இல்லாமல் , தியான முற்று , ஒளி மிகுந்த சுடரொளி கான்பீர்கள் என்கிறார்.
Tags: சிவவாக்கியம்
No Comments