மூன்றாம் வாசலிலே முழுமதியை
கண்டு நின்றேன்
முடிவு அதுவே என்று அகமகிழ்ந்து
நின்று கண்டேன்
முழுமதியும் மறைய கண்டு
முடிவே அதென்ற முடிவோடு நானிருந்தேன்,
முடிவல்ல ஆரம்பம் என்று
ஞாயிறை முடிவாய் நானும் கண்டேன்
ஞாயிறு சுட்ட பின்பே,
மதியுமல்ல விதியுமல்ல
நானும் அல்ல நீயும் அல்ல
அண்ணன் தம்பி யாருமில்ல
அன்னை தந்தை வேறுமில்லை
சொல்லவும் ஏதுமில்லை
சொல்லாதது எதுவுமில்லை
என்ற
சொல்லொனா சூட்சுமத்தை
சொல்லாமல் முடிக்கின்றேன்.
*செசெகு*
Tags: செசெகு
No Comments